Thursday, January 29, 2015

வாட்ஸ் ஆப்பில் தீயாக பரவும் ”மோடியின் காக்கா” (வீடியோ இணைப்பு) !

பிரதமர் மோடியின் காக்கா என்று பெயரிடப்பட்டுள்ள வீடியோ ஒன்று வாட்ஸ்ஆப்பில் தீயாக பரவி வருகிறது.
பிரதமர் மோடி இந்தியாவை சுத்தமாக வைத்துக் கொள்வது மக்களின் கடமை என்று கூறி கடந்த காந்தி ஜெயந்தி அன்று ”சுத்தமான இந்தியா” என்ற பெயரில் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
அன்றைய தினமே அவர் கையில் துடைப்பத்தை எடுத்து இடத்தை கூட்டி சுத்தம் செய்தார்.
மேலும் அவர் கமல்ஹாஸன், அமீர் கான், சச்சின் போன்ற பல பிரபலங்களுக்கு இதேபோல் தங்கள் பகுதிகளை சுத்தம் செய்யுமாறு சவால் விடுத்திருந்தார்.
இந்த சவாலையேற்ற பிரபலங்களும் துடைப்பத்தை கையில் எடுத்து சுத்தம் செய்து, அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவேற்றினர்.
இந்நிலையில் தற்போது வாட்ஸ் ஆப்பில் மோடியின் காக்கா என்ற வீடியோ வேகமாக பரவி வருகிறது.
அதில், காக்கா ஒன்று மக்கள் கீழே வீசிச் சென்ற குப்பையை பொறுக்கி அருகில் உள்ள குப்பைத் தொட்டியில் போடுகிறது.
மேலும், மோடியின் சுத்தமான இந்தியா சவாலை காக்கா கூட ஏற்றுள்ளதாக கூறி இந்த வீடியோவுக்கு மோடியின் காக்கா என்று பெயர் வைத்துள்ளனர்.

No comments:

Post a Comment