Saturday, January 10, 2015

ஒரு இடத்தில் நீச்சல் உடை. மறு இடத்தில் பர்தா பிரான்ஸ் கொலையாளி கூட்டத்தில் ஜிகாட் பெண் !



கடந்த 2 தினங்களுக்கு முன்னர் பிரான்சில் உள்ள சஞ்சிகை ஒன்றின் அலுவலகத்தினுள் புகுந்து, இஸ்லாம் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுள்ளார்கள். இதன்போது 12 பேர் கொல்லப்பட்டார்கள். இதேவேளை இவர்கள் மூவரையும் பிடிக்க பிரான்ஸ் பொலிசார் அனைத்து இடங்களையும் சல்லடை போட்டு தேடினார்கள். இவர்களில் இருவர் சகோதரர்கள் என்பது கண்டு பிடிக்கப்பட்டது. அவர்கள் பாரிஸ் தலைநகரில் இருந்து 25 மைல் தொலைவில் உள்ள ஒரு நகரில் பதுங்கி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. குறித்த அந்த தொடர்மாடி கட்டடத்தை ஆயுதம் தாங்கிய அதிரடிப்படையினர் சுற்றிவளைத்தார்கள். இன் நிலையில் இன்று மாலை இது முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
குறித்த மூன்று தீவிரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். இருப்பினும் ஆபிரிக்கரான மூன்றாவது தீவிரவாதி 6 பொதுமக்களை பணயக்கைதிகளாக்கி, கடை ஒன்றினுள் ஒளிந்து கொண்டார். பிரான்ஸ் அதிரடிப்படையினர் அந்த இடத்தையும் சுற்றிவளைத்து, இறுதியாக உடைத்துக்கொண்டு உள்ளே சென்றார்கள். இதனால் அவர் பிடித்து வைத்திருந்த 6 பேரில் நாலுபேரை அந்த தீவிரவாதி சுட்டுவிட்டார். 2வர் மட்டுமே தப்பியுள்ளார்கள். மேலும் அந்த கடைக்குள் சிக்கிக்கொண்ட மேலதிக பொதுமக்களையும் பொலிசார் மீட்டுள்ளார்கள். ஆனால் சற்று முன் இறந்த மூன்றாவது தீவிரவாதியின் வீட்டை சோதனையிட்ட பொலிசாருக்கு அதிர்சி காத்திருந்தது.
ஆபிரிக்கரின் காதலி ஒருவர், ஒரு புகைப்படத்தில் நீச்சல் உடையோடும். மறு புகைப்படத்தில் குறிசுடும் அம்போடும் உள்ளார். அவரும் ஆயுதப் பயிற்சி எடுத்தவர் என்று கூறப்படுகிறது. இப் பெண் மிகவும் பயங்கரமானவர் என்று கூறப்படுகிறது. இவரை பிடிக்க பொலிசார் போட்ட திட்டத்தில் இருந்து அவர் எப்படியோ தப்பிவிட்டார். இப்பெண் தற்போது பிரான்ஸ் நாட்டில் எங்கோ ஓடிக்கொண்டு இருக்கிறார் என்று கூறப்படுகிறது. மறைவான இடம் ஒன்றில் இவர் தற்போது தங்கி இருக்கலாம் என்றும், இவரிடம் ஆயுதங்கள் இருக்கலாம் என்று பொலிசார் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். 12 பொதுமக்கள் இறந்த சோகத்தில் நாடு மூழ்கியுள்ள இன் நேரம் மேலும் 4 பொதுமக்கள் இன்று(09) இறந்துள்ளார்கள்.







No comments:

Post a Comment