Wednesday, January 7, 2015

6,000 "சைபர் ஆர்மி" வட கொரியாவிடம் உள்ளது: இவர்கள் அமெரிக்காவை தாக்க ரகசிய திட்டம் !


வடகொரியாவின் சுப்பிரீம் தலைவர் என்று கூறப்படுபவர் கிம்-ஜாங்-உன். இவரை மிகவும் தரக்குறைவாக காட்டும் ஒரு சினிமாப் படத்தை சோனி நிறுவனம் தயாரித்து வெளியிட்டு விட்ட செய்தி அனைவரும் அறிந்ததே. அதற்கு பின்னணியில் அமெரிக்கா உள்ளது என்பதும் யாவரும் அறிந்த விடையம். இதனால் கடுப்பில் உள்ளாராம் கிம்-ஜாங்-உன். இவரிடம் "சைபர் ஆர்மி" என்று சொல்லப்படும், கம்பியூட்டர்களை மற்றும் நெட்வேர்க்கை “ஹக்” செய்யும் படையணி ஒன்று உள்ளது என்கிறார்கள். ராணுவத்தில் அதிரடிப் படை, ஆள ஊடுருவும் படையணி என்று இருப்பதுபோல, கிம்-ஜாங்-உன் கிடம் சைபர் ஆர்மி உள்ளது.
இதில் சுமார் 6,000 பேர் இருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் நன்கு பயிற்சிபெற்றவர்கள் என்றுவேறு கூறுகிறார்கள். இவர்களை பயன்படுத்தி அமெரிக்காவில் உள்ள அணு உலைகளை குறிவைக்க உள்ளாராம் கிம்-ஜாங்-உன். பெரும்பாலும் அணு உலைகளில் உள்ள குளிரூட்டிகளை அங்கே உள்ள கம்பியூட்டர்களே கட்டுப்படுத்தி வருகிறது. அதனை செயலிழக்கச் செய்தால், அணு உலை வெப்பம் அதிகரித்து இறுதியில் அது வெடித்து சிதறும். பின்னர் அணு குண்டு போட்டதற்கு சமமான கதிரியக்க துகள்கள் காற்றில் கலக்கும்.
எனவே ஒரு நாட்டின் மீது விமானத்தில் பறந்துசென்று அணு குண்டு வீசுவதற்கு பதிலாக, ஓசை படாமல் இவ்வறு செய்து பெரும் அழிவை ஏற்படுத்தலாம். இதனை கிம்-ஜாங்-உன் செய்ய உள்ளதாக, தென் கொரியா அமெரிக்காவை தற்போது எச்சரித்துள்ளது என்கிறார்கள். இந்தப் பனிப் போர் எங்கே போய் முடியுமோ தெரியவில்லை.

No comments:

Post a Comment