Friday, January 30, 2015

சின்னதாக 1 அங்குலம் ஸ்னோ அடித்தாலே ஸ்தம்பித்துப் போகிறது பிரிட்டன்:


ஏனைய ஐரோப்பிய நாடுகளோடு ஒப்பிடுகையில் பிரித்தானியாவைப் பொறுத்தவரை, பனிப்பொழிவு என்பது மிகவும் குறைவாக தான் காணப்படுகிறது. மற்றைய நாடுகளில் உள்ளவர்கள் பனிப்பொழிவு இருந்தாலும் வாகனங்களை எவ்வாறு ஓட்டுவது என்று கற்று வைத்துள்ளார்கள். ஆனால் பிரித்தானியாவில் உள்ள பல சாரதிகள் பனிப்பொழிவில் எவ்வாறு வாகனத்தை ஓட்டுவது என்று தெரிந்து வைத்திருப்பது இல்லை. அந்த அனுபவும் இல்லை. நேற்றைய தினம், பிரித்தானியாவின் லிவர்பூர், மான்செஸ்டர் பகுதிகளில் சிறிதாக (1 அங்குல) பனிப்பொழிவு இருந்தது. ஆனால் அன் நகரங்களே முற்றாக ஸ்தம்பித்துவிட்டது என்கிறார்கள்.
நெடுஞ்சாலைகளில் அடுத்தடுத்து ஏற்பட்ட விபத்துகள், விமான நிலைய ஓடு பாதை ஐஸ்கட்டியாக மாறியமையால் விமான சேவை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதேவேளை ரயில் சேவையில் கூட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. பிரித்தானியாவைப் பொறுத்தவரை, பனிப்பொழிவு வரப்போகிறது என்றால் அதற்காக ஏற்பாடுகளை அதிகாரிகள் மந்த கதியில் தான் செய்கிறார்கள். அத்தோடு வீதிப் பராமரிப்பு மிகவும் தரம் கெட்ட நிலையில் உள்ளதாக சாரதிகள் தெரிவித்துள்ளார்கள். ஏனைய ஐரோப்பிய நாடுகளில் பனியை உருகச் செய்ய, ஒருவகை கட்டி உப்பை வீதிகளில் தூவுவார்கள். இதுபோன்ற உப்புகள் பிரித்தானியாவில் உள்ள சில கவுன்சில்களிடம் கையிருப்பில் இல்லை என்பது மேலும் அதிர்சி தரும் தகவலாக உள்ளது.

No comments:

Post a Comment