Friday, December 19, 2014

மாமியாரால் மருமகள் சாவு (படம் இணைப்பு)


குடும்ப தகராறில் மாமியார் வெந்நீர் ஊற்றியதில் காயம் அடைந்த மருமகள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதைத் தொடர்ந்து மாமியார் மீதான வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது.

குடும்ப தகராறு

சென்னை தியாகராயநகர், மேட்லி ரோட்டை சேர்ந்தவர் ஜவருல்லாகான். இவருடைய மனைவி ஹாஜி நிஷா. இவர்களது மகன் சாகுல்ஹமீது(வயது 29). கால் டாக்சி டிரைவராக வேலைபார்த்து வந்தார். இவருக்கும் திண்டிவனத்தை சேர்ந்த ஷாகீன்(25) என்ற பெண்ணுக்கும் 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

3 மாதங்கள் சந்தோஷமாக வாழ்ந்த அவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. மாமியாருக்கும், மருமகளுக்கும் ஒத்துப்போகாததால், ஷாகீன் பற்றி தனது மகனிடம் இல்லாததும், பொல்லாததுமாய் ஹாஜி நிஷா சொல்லி வந்தார்.

வெந்நீர் ஊற்றினார்

சாகுல் ஹமீது வீட்டில் இல்லாத நேரத்தில் ஷாகீனுடன், மாமியார் ஹாஜி நிஷா அடிக்கடி சண்டை போட்டார். கடந்த மாதம் 26-ந் தேதி இரவு சாகுல் ஹமீது வீட்டில் இல்லாதபோது மீண்டும் அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஹாஜி நிஷா அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த வெந்நீரை எடுத்து தனது மருமகள் மேல் ஊற்றினார்.

இதில் அவரது மார்பு, வயிறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு வலியால் அலறித்துடித்தார். அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து ஷாகீனை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

21 நாட்களுக்கு பின் சாவு

தகவலறிந்த மாம்பலம் போலீசார் சாகுல் ஹமீது மற்றும் ஹாஜி நிஷா மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்தனர். ஹாஜி நிஷாவை கைது செய்த போலீசார், தலைமறைவான சாகுல் ஹமீதை தேடி வந்தனர். தாய் கைதான விரக்தியில் மறுநாள் சாகுல் ஹமீது ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஷாகீன் 21 நாட்களுக்கு பின்னர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது உடல் சொந்த ஊரான திண்டிவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

மாம்பலம் போலீசார் ஹாஜி நிஷா மீதான கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றினர்.
19 Dec 2014

No comments:

Post a Comment