Friday, December 19, 2014

அவுஸ்திரேலிய நபருக்கு துப்பாக்கி கிடைத்தது எப்படி ?

ஆஸ்திரேலியாவில் தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபட்ட 50 வயதான மான் ஹாரொன் மொனிஸூக்கு துப்பாக்கி கிடைத்தது எப்படி என்பது குறித்து விசாரிக்கப்போவதாக ஆஸி அரசு அறிவித்துள்ளது. ஈரானில் இருந்து அரசியல் அகதியாக ஆஸ்திரேலியாவில் வந்து குடியேறிய இந்த நபர்மீது ஏற்கனவே கிரிமினல் வழக்குகள் உள்ளன. பாலியல் குற்றங்கள், மற்றும் கொலை தொடர்பான வழக்குகள் அவை. அப்படியிருந்தும் ஆஸ்திரேலியாவில் அவருக்கு நிரந்தர வதிவிட விசா வழங்கப்பட்டு, அதன்பின் பிரஜாவுரிமையும் வழங்கப்பட்டுள்ளது.
எந்த அடிப்படையில் இவருக்கு பிரஜாவுரிமை வழங்கப்பட்டது என்பது குறித்து விசாரணை செய்யப்படும் என தெரிவித்துள்ளார், ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அப்போர்ட். இதில் மற்றொரு முக்கிய விஷயம், இந்த நபருக்கு வன்முறையுடன் கூடிய கடந்தகாலம் ஒன்று இருந்துள்ளது. அப்படியிருந்தும் இவர் எப்படி ஆஸ்திரேலிய உளவுத்துறை Asio-வின் வாட்ச் லிஸ்ட்டில் இல்லாமல் இருந்திருக்கிறார் என்பதும் புரியவில்லை. ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அப்போர்ட், “தீவிரவாத பின்னணி, குற்றப் பின்னணி, மற்றும் மன நோய் பாதிப்புக்கான சாத்தியம் ஆகியவை உள்ள இந்த நபருக்கு துப்பாக்கி லைசென்ஸ் கொடுக்கப்பட்டதா என்பதையும் ஆராய வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே மீடியாக்கள், இந்த நபரிடம் துப்பாக்கி லைசென்ஸ் இருந்ததா என ஏற்கனவே விசாரித்து விட்டனர். மான் ஹாரொன் மொனிஸ் கடைசியாக வசித்துவந்த நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் இவருக்கு தற்போதும் செல்லுபடியாகும் துப்பாக்கி லைசென்ஸ் வழங்கப்பட்டதாக பதிவுகள் இல்லை. ஆனால், 1999-2000 ஆண்டு காலப்பகுதியில் இவர் துப்பாக்கி லைசென்ஸ் வைத்திருந்திருக்கலாம் என்கிறார்கள். காரணம், அந்த நாட்களில் இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பாதுகாப்பு அதிகாரியாக பணிபுரிந்திருக்கிறார்.
http://www.athirvu.com/newsdetail/1687.html

No comments:

Post a Comment