Thursday, December 18, 2014

எரிமலை குழம்பில் காலை வைக்கு லூசுத்தனமான செயல் : வீடியோ இணைப்பு !

அமெரிக்காவுக்கு அருகாமையில் உள்ள ஹவ்வாய் தீவுகளில் அதிகம் எரிமலை காணப்படுகிறது. சுற்றுலாப் பயணிகளின் சொர்க பூமியாக விளங்கும் இடம் ஹவ்வாய் தீவுகள் ஆகும். அமெரிக்காவின் விஞ்ஞானி ஒருவர், எரியும் குழம்பு மீது தனது பூட்ஸ் காலை வைத்துப் பார்த்துள்ளார். பொதுவாக 700 டிகிரி செல்சியஸ் முதல் 1200 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை இந்த எரியும் குழம்பில் காணப்படும். ஆனால் அதிஷ்டவசமாக இவரது பூட்ஸ் சூ தப்பிவிட்டது எனலாம். பொதுவாக இது ஒட்டும் தன்மை கொண்டது என்பதனால் ஒருவர் உடலில் அல்லது ஒரு பொருளில் ஒட்டிக்கொண்டால், அது தொடர்ந்து எரியும் தன்மை கொண்டது.

இதில் போய் காலை வைப்பது என்பது காலை இழக்க வழிகோலும். தற்போது எல்லாம் இது ஒரு ஸ்டண்டாக மாறிவிட்டது. அனகொண்டா பாம்பில் வாய்க்கு உள்ளே தலையை விடுவது, 100 மாடி கட்டிடத்தில் ஏறி நின்று செல்பி எடுப்பது , என்று பலர் தம்மை தாமே படம் எடுத்து யூ ரியூபில் போட்டு பேருமை தேடிக்கொள்கிறார்கள். ஆனால் சற்று தவறினால் கூட மரணம் காத்து நிற்கிறது என்பதனை மறந்துவிடுகிறார்கள்.
http://www.athirvu.com/newsdetail/1685.html

No comments:

Post a Comment