Monday, December 29, 2014

கொழுந்து விட்டு எரியும் உல்லாசப் படகு இதுதான்: 400 க்கும் அதிகமான பயணிகள் நடுக்கடலில் !


கிரேக்கத்தின் கோர்புவிலிருந்து வடமேற்காக 40 கடல் மைல் தொலைவில் பாரிய படகு ஒன்று தீப்பிடித்துள்ளது. இதில் 460 பயணிகள் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்பதற்கான பாரிய நடவடிக்கை ஒன்று தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. கிரேக்கத்தின் துறைமுக நகரான பட்ராஸில் இருந்து இத்தாலியின் அன்கோனா நகரை நோக்கி பயணித்த ‘த நேர்மன் அட்லாண்டிக்’ என்ற படகே விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தைப் பார்த்த அருகிலிருந்த கப்பல்கள், எரியும் படகிலிருக்கும் பயணிகள் மற்றும் சிப்பந்திகளை மீட்பதற்கான கோரிக்கையை விடுத்திருந்தார்கள். ஆனபோதும், கடும் காற்று சுழன்றடிப்பதால் மீட்புப்பணிகள் மந்த கதியை அடைத்திருப்பதாக கிரேக்க உத்தியோகபூர்வ தரப்பு தெரிவித்துள்ளது. ஆனால் கடும் காற்று காரணமாக கப்பலில் தீ அதிகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது. ட்டத்தட்ட 35 பயணிகள் உயர்காப்பு படகுகள் மூலம் பிறிதொரு கிரேக்கப்படகிற்கு மாற்றப்பட்டுள்ளதாக கிரேக்க கப்பல் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதுவொரு சிக்கலான மீட்புப்பணி. காலநிலை மிகவும் மோசமாக இருக்கின்றது. எனவே, மீட்புக்களின் சாத்தியப்பாடுகள் மிகவும் மோசமாக இருக்கின்றன. ஆனால், மீட்புப்பணிகளுக்காக நல்ல கப்பல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. எனவே, நம்பிக்கையுடன் காத்திருக்கின்றோம் என்று அவர் மேலும் குறிப்பிட்டார். இதேவேளை தங்கள் உயிரைக் காப்பாற்ற கடலில் குதித்த பலர், இன்னும் மிதந்துகொண்டு இருப்பதாக கூறப்படுகிறது.


No comments:

Post a Comment