Friday, December 19, 2014

களுவாஞ்சிக்குடியில் வெள்ளத்தில் மூழ்கும் வீடுகள்,டயகமவில் வீடமைப்பு திட்டம் ஆரம்பம் - முதற்கட்டமாக 25 வீடுகளை நிர்மாணிக்க நடவடிக்கை

யாழில் ரயில் மோதி ஒருவர் பலி
[ வெள்ளிக்கிழமை, 19 டிசெம்பர் 2014, 08:01.50 AM GMT ]
யாழ்.மாவட்டச் செயலகத்துக்கு அருகில் உள்ள பாதுகாப்பான ரயில் கடவை பகுதியில் இன்று காலை ரயில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று முற்பகல் 10.30 மணியளவில யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு பயணித்த கடுகதி ரயில் குறித்த நபரை மோதியுள்ளது.
ரயிலைக் கவனிக்காது ரயில் பாதையில் குறித்த நபர் சென்று கொண்டிருந்த சமயம் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் உயிரிழந்தார் என்றும், உடனடியாக ரயிலில் சடலம் ஏற்றப்பட்டு யாழ்.பிரதான ரயில் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmszCSdKako0.html

டயகமவில் வீடமைப்பு திட்டம் ஆரம்பம் - முதற்கட்டமாக 25 வீடுகளை நிர்மாணிக்க நடவடிக்கை
[ வெள்ளிக்கிழமை, 19 டிசெம்பர் 2014, 09:12.51 AM GMT ]
மலையகத்தில் 50,000 வீடுகள் அமைக்கும் திட்டத்தின் கீழ் டயகம பிரதேசத்தில்  25 குடும்பங்களுக்கான வீடுகள் அமைக்கும் பணிகள் இன்று டயகமவில் ஆரம்பிக்கப்பட்டன.
அண்மையில் தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இந்த வீடுகள் வழங்கப்படவுள்ளன.
இதில் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அத்தோடு டயகம வௌர்லி தோட்ட பகுதியில் வீடுகள் அற்ற நிலையில் உள்ளவர்களுக்கான 75 வீடுகள் அமைக்கப்படவுள்ளதோடு மொத்தமாக இப்பிரதேசத்தில் 100 வீடுகள் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடதக்கது.
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் இவ்வேலையின் நிர்மாணத்துறைகள் செய்யப்படும்.
இந்த வீடுகளை நிர்மாணிப்பதற்கு தகுந்த இடத்தை குறித்த தோட்டத்தின் மூலம் பெற்றுக்கொண்டதுடன் மேற்படி இடத்தை தேசிய கட்டிட ஆய்வு நிறுவன அதிகாரிகளால் பரிசோதனை செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடதக்கது.
குறுகிய காலத்தில் இந்த வீடுகள் நிர்மாணித்து கொடுக்கப்படவுள்ளன. குடிநீர், மின்சாரம் மட்டுமல்லாது வீதி உட்பட உட்கட்டமைப்பு வசதிகளும் நிர்மாணிக்கப்படவுள்ளன.
http://www.tamilwin.com/show-RUmszCSdKako2.html

களுவாஞ்சிக்குடியில் வெள்ளத்தில் மூழ்கும் வீடுகள்
[ வெள்ளிக்கிழமை, 19 டிசெம்பர் 2014, 10:25.20 AM GMT ]
மட்டக்களப்பு மாவட்டத்தில் மழை பெய்து வருகின்ற நிலையில், மண்முனை தென்னெருவில்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட களுவாஞ்சிக்குடி கிராமத்தில் 10 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
மேற்படி பகுதியில் வெள்ளம் தேங்கிநி ற்பதால், பொதுமக்களின் அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் புதன்கிழமை காலை 8.30 மணியிலிருந்து வியாழக்கிழமை காலை 8.30 மணிவரையான கடந்த 24 மணித்தியாலங்களில் 27.2 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வானிலை அதிகாரி கே.சூரியகுமாரன் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszCSdKako5.html

No comments:

Post a Comment