Friday, November 28, 2014

மாவீர நாள் சுடர் ஏற்றினார் பா.அரியநேத்திரன் MP (படங்கள் இணைப்பு)

பொத்துவிலின் மிக முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் தலைவர் மைத்திரியை ஆதரிக்க தயாராகிறார்.
பொத்துவிலின் மிக முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் புள்ளி ஒருவர் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரியை ஆதரிக்கப் போவதாக எமக்கு நம்பகமான செய்தி கிடைக்கப் பெற்றுள்ளது.

இது பற்றி சந்திரிக்கா அணியினருடன் தான் பேச்சுவார்த்தையில் ஈடு படுவதாக அறிவித்தள்ளார். காலம் வரும் பொழுது ஊடகங்களில் தனது பெயரை தெரிவிக்க உள்ளதாக குறித்த நபரின் நெருங்கிய ஆதரவாளர் எம்மிடம் தெரிவித்தார்.

முன்னாள் பாராளுமன்ற மாகாண சபை உறுப்பினர் எம். அப்துல் மஜீத் அவர்கள் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசில் இருந்து விலகி ஜக்கிய தேசிய கட்சியில் இணைந்த பின்னர் பொத்துவிலில் பாரிய திருப்பம் இடம் பெற்றுள்ளது. அதேவேளை பொத்துவில் பிரதேச சபையின் இரண்டு உறுப்பினர்கள் மகிந்த அரசாங்கத்தை ஆதரிப்பதாக முடிவெடுத்து தேர்தலுக்குரிய முன்னாயத்தங்களை செய்துவருகின்றனர்.

மேலும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மகிந்தவை ஆதரிக்கும் பட்சத்தில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் இரண்டு பிரதேச சபை உறுப்பினர்கள் பொத்துவில் மக்களின் இருப்பை பாதுகாக்கும் நோக்கில் கட்சியில் இருந்து விலகி தனித்துவமா கமைத்திரியை ஆதரிக்கப் போவதாக எமக்கு சற்றுமுன் செய்தி கிடைத்துள்ளது.
28 Nov 2014

மாவீர நாள் சுடர் ஏற்றினார் பா.அரியநேத்திரன் MP (படங்கள் இணைப்பு)
மாவீரர் நாள் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் சுடர் ஏற்றி அகவணக்கம் செலுத்தினார். மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் மாவீர நாள் அகவணக்கம் செலுத்தப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பிரதேசங்களில் பல இடங்களில் தங்களது உறவுகளுக்காக வேண்டி மாவீரர் நாள் நிகழ்வுகள் நடைபெற்றது ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மாவீரர் நாள் நிகழ்வுகள் இம்முறை பலத்த கெடுபிடிகளின் மத்தியிலும் நடைபெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

28 Nov 2014
http://lankaroad.net/index.php?subaction=showfull&id=1417176995&archive=&start_from=&ucat=1&


No comments:

Post a Comment