Friday, November 21, 2014

மன்னார் ஆயர் தலைமையில் தமிழ் சிவில் சமூக அமையம் வடிவமைப்பு! மட்டு - அம்பாறை சர்வமத தலைவர்கள் சந்திப்பு


ஐயோ சிறிசேன, சேறுபூசும் சுவரொட்டி தயார்! நாளைக்குள் ஒட்டப்படும்
[ வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2014, 04:28.24 PM GMT ]
ஐயோ சிறிசேன என்ற தலைப்பில் அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக சேறுபூசும் வாசகங்கள் கொண்ட சுவரொட்டிகள் தயாராகி வருவதாக தெரியவந்துள்ளது.
நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி திணைக்களத்தின் செலவில் இந்த சுவரொட்டிகள் தற்போது கொழும்பில் அதிபாதுகாப்பு வலயமொன்றின் அருகாமையில் உள்ள அச்சகமொன்றில் அச்சிடப்படுகின்றது.
இதனை நாடுபூராகவும் எடுத்துச் சென்று காலைப் பொழுது புலர்வதற்குள்ளாக நாடெங்கும் பரவலாக ஒட்டுவதற்கான ஏற்பாடுகளை ஆளுங்கட்சி மேற்கொண்டுள்ளது.
இதற்கென துறைமுக அதிகார சபை மற்றும் நெடுஞ்சாலைப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்படவள்ளனர். மேலும் பாதுகாப்புக்கு ஒவ்வொரு லொறிக்கும் மூன்று பொலிசார் வீதம் வழங்கப்படவுள்ளனர்.
இனிவரும் நாட்களில் இதுபோன்ற சேறுபூசும் சுவரொட்டிகளை தொடர்ச்சியாக ஒட்டவும் ஆளுங்கட்சி தீர்மானித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBRVKYhwy.html


மன்னார் ஆயர் தலைமையில் தமிழ் சிவில் சமூக அமையம் வடிவமைப்பு! மட்டு - அம்பாறை சர்வமத தலைவர்கள் சந்திப்பு
[ வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2014, 04:05.24 PM GMT ]
கடந்த 5 வருடங்களாக தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக பல்வேறு வழிகளில் குரல் கொடுத்துவரும் மன்னார் ஆயர் தலைமையிலான தமிழ் சிவில் சமூகம் சமகாலத்தில் தமிழ் சிவில் சமூக அமையம் என்னும் பெயரில் வடிவமைக்கப்பட்டு வெளிப்படையாக இயங்குவதற்கு முன்வந்திருப்பதாக அமையத்தின் பேச்சாளர் குமாரவடிவேல் குருபரன் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் மேற்படி அமையத்தின் சார்பில் யாழ்.ஊடக அமையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் அங்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார்.
சந்திப்பில் மேலும் அவர் குறிப்பிடுகையில்,
 அண்மையில் நடைபெற்ற மேற்படி அமையத் தின் வருடாந்த ஒன்று கூடலில், தமிழர் தாயகத்தின் அனைத்துப் பாகங்களிலிருந்தும் சுமார் 60ற்கும் மேற்பட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது அனைவராலும் எமது அமையத்தின் கொள்கை ஆவணமும், யாப்பும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் குறித்த ஒன்றுகூடலின் போதே அமையத்தின் நிர்வாக குழுவும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
அதற்கமைய அமையத்தின் அழைப்பாளராக மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் மற்றும் இணைச் செயலாளர்கள் பொ.ந.சிங்கம் ராஜன், பேச்சாளர்களாக குமாரவடிவேல் குருபரன் மற்றும் எழில் ராஜன் மற்றும் பொருளாளராக பேராசிரியர் வி.பி.சிவநாதன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோன்று வடகிழக்கு மாகாணங்களில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்குமான அமையத்தின் இணைப்பாளர்களும் வடகிழக்கிற்கு வெளியேயான மாவட்டங்களுக்கான ஓர் இணைப்பாளரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
மாவட்ட ரீதியாக தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டு பொருத்தமான வேலைத்திட்டங்களும் அடையாளம் காணப்பட்டதாக, அவர் கூறியிருப்பதுடன், மேற்படி அமையத்திற்காக உருவாக்கப்பட்ட கொள்ளை ஆவணம் பற்றியும் குறிப்புரை வழங்கினார்.
மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட சர்வமத அமைப்புகளுக்கிடையிலான கலந்துரையாடல்
மட்டக்களப்பு கரிதாஸ் எகெட் நிறுவனத்தின் வேண்டுகோளுக்கிணங்க மட்டக்களப்பு சர்வமத அமைப்பின் உறுப்பினர்களுக்கு அம்பாறை மாவட்ட சர்வமத அமைப்பு தனது செயற்பாடுகளை எவ்வாறு மேற்கொள்கின்றது. இங்கு அச்செயற்பாடுகளை எவ்வாறு மேற்கொள்ளலாம் இதன் மூலம் எதிர்கால செயற்திட்டங்களை இரு மாவட்ட அமைப்புகளும் சேர்ந்து எவ்வாறு மேற்கொள்ளலாம் என்பது பற்றி ஆராயும் முகமான ஒன்றுகூடல் நிகழ்வு இன்று (21) மட்டக்களப்பு கரிதாஸ் எகெட் அமைப்பின் சமாதானத்திற்கான திட்ட இணைப்பாளர் கிறிஸ்டி அவர்களின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட சமாதானத்திற்கான சர்வமதங்களின் ஒன்றியத்தின் தலைவர் வைத்தியர் ஜமீல் தலைமையில் கல்முனையில் இடம்பெற்றது.
மேற்படி நிகழ்வில் மட்டக்களப்பு கரிதாஸ் எகெட் அமைப்பின் சமாதானத்திற்கான திட்ட இணைப்பாளர் கிறிஸ்டி, நிர்வாக உத்தியோகஸ்தர் மூர்த்தி, மட்டக்களப்பு மாவட்ட சர்வமத அமைப்புகளின் உறுப்பினர்கள் அம்பாறை மாவட்ட சமாதானத்திற்கான சர்வமதங்களின் அமைப்பின் தலைவர் உட்பட அதன் செயலாளரும் ஊடகவியலாளரும், உதவிக்கல்விப் பணிப்பாளருமான வி.ரி.சகாதேவராஜா, அமைப்பின் பொருளாளர் பாஸ்டர் கிறிஸ்தோபர், உபதலைவர்களுள் ஒருவரான பாஸ்டர் கிருபைராசா, உபசெயலாளர் இப்றாஹிம் ஆகியோருடன் அதன் உறுப்பினர்களும் என பலர் கலந்து கொண்டனர்.
இரு மாவட்ட சர்வமத குழுக்ககளுக்கிடையில் நல்லுறவை ஏற்படுத்தும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட இவ் ஒன்றுகூடலில் அம்பாறை மாவட்ட அமைப்பின் செயற்பாடுகள் பற்றி விரிவாக எடுத்துரைக்கப்பட்டதுடன் இரு அமைப்புகளின் உறுப்பினர்களுக்கிடையில் கருத்துப் பரிமாற்றங்களும் மேற்கொள்ளப்பட்டன.
பின்னர் மட்டக்களப்பில் இருந்து சென்ற குழுவினர் சொறிக்கல்முனை கிறிஸ்தவ தேவாலயம் மற்றும் களுதாவளை பிள்ளையார் ஆலயம் ஆகியவற்றிற்குச் சென்று தரிசனம் செய்தமையும் குறிப்பிடத்தக்கது.

தமிழினம் தொடர்ச்சியாக அந்நியரை,காட்ட்டிக்கொடுப்போரை,மாறுவோரை,மாற்று வோரை ஆதரித்து தலைமையை கொடுத்தே அழிகின்றது!உண்மையான மாறாத வீரம் நிறைந்த தமிழனே இல்லைபோலும்!!

No comments:

Post a Comment