Friday, November 28, 2014

நான் கற்பழிக்கப்பட்டேன்: கண்ணீர் வடிக்கும் ஹாலிவுட் நட்சத்திர நாயகன் (வீடியோ இணைப்பு)

அமெரிக்காவை சேர்ந்த பிரபல ஹாலிவுட் நடிகர், இளம்பெண் ஒருவரால் கற்பழிக்கப்பட்ட சம்பவத்தை கண்ணீர் பொங்க விவரித்துள்ளார்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் (Los Angels) மாகாணத்தில் சிஷா லபியுப் (Shia LaBeouf) என்ற ஹாலிவுட் நடிகர்,கடந்த பெப்ரவரி 14ம் திகதி தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை பற்றி பிரிட்டிஷ் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.
இவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, காதலர் தினத்தன்று நான் கலை நிகழ்ச்சி ஒன்றிற்கு என் காதலியுடன் சென்றிருந்தேன். இந்த நிகழ்ச்சிக்கு பல திரை நட்சத்திரங்கள் வருகை தந்திருந்தனர்.
அங்கு வந்த பெண் ஒருவர் என் அருகே வந்து என்னிடம் பேசுவது போல் பாசாங்கு செய்து, திடீரென எனது ஆடைகளை அவிழ்த்து கற்பழித்தார்.
அப்போது நான் எவ்வளவு முயன்றும் என்னால் அவரை கட்டுப்படுத்த முடியவில்லை. இதை அனைவரின் முன்னிலையுமே அவர் செய்தார்.
பிறகு கொடூர தோற்றத்துடன் அவ்விடத்தை விட்டு அவர் சென்றதை எல்லோரும் பார்த்தனர்.
ஆனால் இச்சம்பவத்தின் போது எனது காதலி கலை அரங்கத்திற்கு வெளியே எனக்காக காத்திருந்தார்.
மேலும் காதலர் தினத்தில் அரங்கேறிய இந்த துயர சம்பவத்தால், இனி என்றுமே நான் பிரபலமானவன் இல்லை என தன் முகத்தை மூடிய படி பேட்டியளித்துள்ளார்.

No comments:

Post a Comment