Tuesday, November 25, 2014

சீனாவிடம் ரகசிய ஆளில்லா சூப்பர் சோனிக் விமானம் ?

உலகில் உள்ள பல நாடுகளிடம் ஆளில்லா வேவு விமானங்கள் உள்ளது. முதல் கட்டமாக ஆளில்லா வேவு விமானங்களை தயாரித்து வேவு நடவடிக்கையில் பல நாடுகள் ஈடுபட்டன. பின்னர் அமெரிக்கா இஸ்ரேல் போன்ற நாடுகள் வேவு விமானங்களில் சில சிறிய ரக ஏவுகணைகளைப் பொருத்தியது. ஆனால் இதுவரை காலமும் எந்த நாடும் அதிவேகம் கொண்ட ஆளில்லா விமானங்களை உருவாக்கவில்லை. குறிப்பாக சூப்பர் சோனிக் எனப்படும் மிகையொலி ஆளில்லா விமானங்களை உருவாக்குவது தொடர்பாக அமெரிக்காவே இதுவரை அக்கறை காட்டவில்லை. ஆனால் சீனாவிடம் இந்த ரக விமானங்கள் இருப்பதாக தற்போது ரகசிய செய்திகள் கசிந்துள்ளது.
2006ம் ஆண்டு முதலே இதற்கான ஆராட்சிகள் நடைபெற்று வந்ததாகவும். தற்போது ஆராட்சிகள் பூர்த்தியாகி முழுமையான வடிவமைப்பை இந்த வேவுவிமானம் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த ஆளில்லா சூப்பர் சோனிக் விமானத்திற்கு "அன் -ஜயான்" என்று சீனா பெயரிட்டுள்ளது என்று மேலும் அறியப்படுகிறது. இதேவேளை பிரித்தானிய வான்வெளி ஆராட்சி மையம், ஆளில்லா சூப்பர் சோனிக் விமானத்தை உற்பத்தி செய்ய ஏற்கனவே திட்டமிட்டு இருந்தது என்றும் ஆனால் அதற்கு முன்னதாக சீனா அதனை தயாரித்துவிட்டது என்றும் கூறப்படுகிறது.
சீனாவில் உள்ள ஒரு மறைவான இடத்தில் இப்பரிசோதனைகள் விரைவில் நடத்தப்படும் என்றும், இந்த ஆளில்லா சூபர் சோனிக் விமானம் முதன் முதலாக பறப்பில் ஈடுபட உள்ளது என்றும் கூறப்படுகிறது. அப்படி இது சாத்தியமானால் சீனாவில் இருந்து ஒலியை விட வேகத்தில் புறப்படும் ஆளில்லா விமானம் சில நிமிடங்களில் எல்லாம் தான் அடையவேண்டிய இடத்தை அடைந்து தாக்குதல் அல்லது வேவுப்பணிகளில் ஈடுபடும். இதனால் அண்டைய நாடுகளுக்கு பெரும் ஆபத்தும் உண்டு.
http://www.athirvu.com/newsdetail/1510.html

No comments:

Post a Comment