Thursday, November 27, 2014

விண்ணில் உலாவரும் ரஷ்யாவின் மர்ம விண்கலம் : அதிர்ச்சியில் உலக நாடுகள் !

ரஷ்யா ரகசியமான முறையில் விண்கலன் போன்ற மர்ம எந்திரத்தை விண்ணில் செலுத்தியது அம்பலமாகியுள்ளது. கடந்த மே மாதம் இந்த இயந்திரம் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இது குறித்த தகவல்கள் இரகசியமாக பேணப்பட்டு வந்தது. குறித்த இந்தக் கலம் விண்ணில் ஏவப்பட இருந்தது கூட எந்த ஒரு நாட்டுக்கும் தெரியாது. இது கடந்த மே மாதம் ஏவப்பட்டு இருக்கிறது. ஆனால் அது தொடர்பான செய்திகள் தற்போது தான் கசிந்துள்ளது என்றால், இதனை ரஷ்யா எவ்வளவு ரகசியமாக பேணியுள்ளது என்பது அனைவருக்கும் புரியும்.
இந்த நிலையில் தற்போது அது விண்ணில் பறப்பதை சில நாடுகளின் விண்வெளி நிறுவனங்கள் கண்டுபிடித்துள்ளன. தெற்கு பசிபிக் கடலின் மீது பறந்த போது இது கண்டறியப்பட்டது. தொடக்கத்தில் இது விண்ணில் சுற்றி வரும் விண்கலன்களை கண்காணிக்கவும், விண்வெளியில் உடைந்து மிதக்கும் விண்கலன் இடிபாடுகளை அகற்றவும் உதவும் என கருதப்பட்டது. தற்போது அது எதிரி நாட்டு விண்கலன்களை அழிப்பதற்காக அனுப்பப்பட்டதாக இருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. விண்கலன் போன்ற மர்ம எந்திரத்துக்கு 2014–28 இ என பெயரிடப்பட்டுள்ளதாம்.
உண்மையில் இது நாடுகளை வேவுபார்க்க அனுப்பப்பட்டதா இல்லை ஏனைய விண் கலங்களை தேவை ஏற்படும்போது அழிக்க அனுப்பப்பட்டதா என்று தெரியாத நிலை காணப்படுகிறது.

No comments:

Post a Comment