Friday, November 28, 2014

லண்டன் பிச்சைக்காரியிடம் 300 ஆயிரம் பவுன்ஸ் காசு: சுவிஸ் பேங்கில் பணத்தை போட்டு வைத்திருந்துள்ளார் !

லண்டனில் வசித்துவந்த கரலைன் பொக்ஸ்லி என்னும் 59 வயதுடைய பெண் பெரும் கில்லாடி தான் போங்கள். லண்டனில் என்ன என்ன பெனிவிட் எல்லாம் இருக்கிறதோ அது அனைத்தையும் அவர் எடுத்துள்ளார். வீட்டுக்கு கொடுக்கப்படும் பெனிவிட், வேலையில்லாத பெனிவிட், பிள்ளைகளை பராமரிக்கும் பெனிவிட் என்று சகல பெனிவிட்டுகளையும் இவர் எடுத்ததோடு தனது பிள்ளை ரஷயாவில் படிக்கவைத்துள்ளார். ஆனால் லண்டனில் பிள்ளைகள் இருப்பதுபோல காட்டிக்கொண்டுள்ளார். இதேவேளை வீடு இல்லாத மற்றும் பிள்ளைகளோடு வசிக்கும் குடும்பத்தவர்களுக்கு கவுன்சிலால் கொடுக்கும் வீட்டை வாடகைக்கு விட்டு, அதிலும் பெரும் பணத்தை சம்பாதித்துள்ளார்.
இப்படி அரசாங்கத்தினால் கொடுக்கப்படும் சகல பெனிவிட்டுகளையும் எடுத்து இவர் சேகரித்து சுவிஸ் வங்கியில் 300,000 (முன்னூறாயிரம்) பவுன்சுகளை போட்டுள்ளார். மேலும் லண்டனில் உள்ள தனது ஒரு வங்கியில் இருந்து ரஷ்யாவுக்கு 40,000 ஆயிரம் பவுன்ஸை மாற்ற முற்பட்டவேளையே இவர் சிக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் பிரிட்டனை விட்டு ரஷ்யா சென்று குடியேற திட்டமிட்டுள்ளார். இதனை அறிந்துகொண்ட பிரித்தானியப் பொலிசார் அவரைக் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளார்கள். படுக்க கட்டில் இல்லை, குளிர்காலத்தில் போக்க போர்வை இல்லை என்று சொல்லி எல்லாம், பெரும்பணத்தை கவுன்சிலிடம் இருந்து இவர் பெற்றுள்ளார்.
ஆனால் ஒன்று மட்டும் நன்றாகத் தெரிகிறது. எதனை சொன்னால் கவுன்சில், பெனிவிட், மற்றும் அரசாங்கம் பணத்தை தருவார்கள் என்று இந்த கிழவி நன்றாக அறிந்துவைத்துள்ளார்.

No comments:

Post a Comment