யுஎஸ்- 13-வயது பையன் ஒருவன் நான்கு வருடங்களிற்கு முன்னர் காணாமல் போய் உள்ளான். இவன் ஒரு லினன் குளொசெட்டிற்குள் ஒரு பொய்யான சுவருக்குப் பின்னால் சிறைவைக்கப்பட்டிருந்தது கண்டிபிடிக்கப்பட்டு தாயுடன் இணைந்த உணர்ச்சிகரமான தருணம் இதுவாகும்.
பெயர் வெளியிடப்படாத இந்த இளைஞன், தான் ஜோர்ஜியாவில் கிளெய்ரன் கவுன்ரி என்ற இடத்தில் உள்ள வீடொன்றில் சிறைவைக்கப்பட்டுள்ளதுடன் தாக்கப்பட்டும் இருப்பதாக ஒரு செல்பேசி பயன்பாட்டை பதிவிறக்கம் செய்து வுளொரிடாவைச் சேர்ந்த தனது தாயாருக்கு உரை மூலம் தெரிவித்துள்ளான் என தெரியவந்துள்ளது.
இந்த தகவல் பிரகாரம் அவ்விடத்தை அடைந்த பொலிசார் வாகனதரிப்பிடத்திற்குள் உள்ள லினன் குளொசெட் ஒன்றிற்குள் பொய்யான ஒரு மரச்சட்டத்தின் பின்னால் மறைத்து வைக்கப்படிருந்ததை கண்டு பிடித்துள்ளனர். தன்னை காப்பாற்றியதற்காக அதிகாரிகளிற்கு தனது நன்றியை தெரிவித்தான் என கூறப்பட்டுள்ளது.
சனிக்கிழமை காலை அவனது தாயார் ஜோர்ஜியாவிற்கு பயணம் செய்து தனது மகளை தழுவிய காட்சி இதயத்தை திருகும் காட்சியாக அமைந்தது. அருகில் நின்ற உறவுக்காரர்களும் கட்டுப்படுத்த முடியாத வாறு தேம்பி அழுதனர்.
அந்த வீட்டில் காணப்பட்ட பையனின் தந்தை, மாற்றாந்தாய் மற்றும் 3-இளம் சிறார்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது ஒரு பிள்ளைக்கு தவறான சிறை, அடைத்து வைத்திருந்தது மற்றும் கொடுமை செய்ததென்ற குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன.
2010-ல் பையன் தனது தந்தையிடம் சென்ற பின் வீடு திரும்பாததால் காணாமல் போனதாக அறிவிக்கப் பட்டுள்ளது. பையனை தாயிடம் திருப்பி அனுப்ப தந்தை மறுத்ததாகவும் தெரியவந்துள்ளது.
தாயார் ஒருபோதும் பொலிசாருடன் தொடர்புகொள்ளவில்லை. காரணம் அவர் ஒரு புலம்பெயர்ந்து வந்தவராகையால் அமைப்புக்கள் சம்பந்தமான பரிச்சயமற்றவர். ஆனால் மகனிடம் இருந்து உரை செய்தி வந்ததம் உடனடியாக 911-ஐ அழைத்துள்ளார்.
அழைப்பை தொடர்ந்து சனிக்கிழமை அதிகாலை 2-மணிக்கு பொலிசார் குறிப்பிட்ட இடத்தை அடைந்துள்ளனர். வீட்டில் இருந்தவர்கள் ஒத்துழைக்காத படியால் பாதிக்கப்பட்ட பையனை கண்டு பிடிக்க பல நிமிடங்கள் எடுத்துள்ளது.
தாங்கள் பையனை கண்டுபிடித்ததும் அவன் மிக மகிழ்ச்சி அடைந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
பையன் குடும்பம் மற்றும் பிள்ளைகள் சேவைகள் பிரிவின் பாதுகாப்பில் அடுத்த சில நாட்களிற்கு இருக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டது. புலன்விசாரனை தொடர்கின்றது.
boyboy2boy3boy4