Sunday, September 21, 2014

எனக்கு எல்லா நாளுமே "டாப்" தான் ஜே சொன்ன மேட்டர் என்ன ?

ஷங்கரின் "ஐ" படத்தின் ஆடியோ ரிலிசுக்காக அமெரிக்காவில் இருந்து, பிரபல நடிகர் ஆர்னோல்ட் சென்னை வந்தார். அமெரிக்க கலிஃபோர்னியா மாநிலத்தின் கவர்னராக இவர் 2 தடவை இருந்துள்ளார். அத்தோடு வரவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலிலும் அவர் போட்டியிட உள்ளார். ஆர்னோல்ட் சென்னை வருமுன்னரே தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவை தான் சந்திக்கவேண்டும் என்று கோரியிருந்தார். அதற்கான ஏற்பாடுகளை, இயக்குனர் ஷங்கர் மேற்கொண்டு இருந்தார். இச் சந்திப்பும் சுமூகமாக நடைபெற்றதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் பேசிக்கொண்டபோது, என்ன நாட்கள் உங்களுக்கு டாப் பான நாட்களாக இருக்கும் என்று ஒரு கேள்வியை ஆர்னோல் கேட்டுள்ளார்.
அதற்கு பதி அளித்த செல்வி ஜெயலலிதா, எல்லா நாளும் எனக்கு டாப் தான் என்று கூறியுள்ளார். அட 27ம் திகதி வழக்கின் முடிவு வரவுள்ளதே அந்த நாளையும் சேர்த்து தான் சொன்னாரா ஜெயலலிதா என்று தெரியவில்லை. அல்லது இப்படி ஒரு வழக்கு இருக்கு என்று அறிந்து தான் ஆர்னோல்ட் இப்படிக் கேட்டாரா என்றும் தெரியவில்லை. ஒட்டு மொத்ததில் ஒருவரை ஒருவர் பார்த்து, டாப் பான நாட்களைப் பற்றிப் பேசிக்கொண்டார்கள் போல இருக்கே ?

No comments:

Post a Comment