Friday, September 12, 2014

ஐ.எஸ்.ஐ.எஸ்-சிற்கு எதிராக களமிறங்கிய அரேபிய நாடுகள் (வீடியோ இணைப்பு)

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்துவதற்கு 10 அரேபிய நாடுகள் அமெரிக்காவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
மத்திய கிழக்கு நாடுகளுக்கான விஜயத்தை ஆரம்பித்துள்ள அமெரிக்காவின் ராஜாங்க செயலாளர் ஜோன் கெரி (John Kerry), ஜெட்டா நகரில் வைத்து அரேபிய நாடுகளின் தலைவர்களை சந்தித்திருந்தார்.
இதன் போது இந்த ஆதரவு குறித்த உறுதிமொழி வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஜோன் கெரி, ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக கடுமையான செயற்பாடுகளை நடத்த தயாராக இருப்பதாக கூறினார்.
எவ்வாறாயினும், சிரியாவில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா தாக்குதல் நடத்துவது, சர்வதேச சட்டத்தை மீறும் செயல் என்று ரஷ்யா எச்சரித்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையின் அனுமதி இன்றி இவ்வாறு தாக்குதல் நடத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று ரஷ்யாவின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

http://newsonews.com/view.php?22cOl72bcY80Mb4e3SMC402dBnB2dd0nBnz302C6A42e4g08Secb3lOKc3

No comments:

Post a Comment