Sunday, September 21, 2014

கடலிற்லு அடியில் 40 அடி ஆழத்தில் உள்ள ஹோட்டலில் தங்க 13 வருடமாக காத்திருக்கும் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் !

துபாய்:

பிஜி நாட்டில் உள்ள தனியார் தீவு ஒன்றில் கடலுக்கு அடியில் ஹோட்டல் கட்டுவதற்கான பணி 2001ல் தொடங்கப்பட்டது. 25அறைகள் கொண்ட இந்த ஹோட்டல் கடலுக்கு அடியில் 40 அடி ஆழத்தில் சிறப்பு கண்ணாடி கூண்டுகளை கொண்டு அமைக்கப்பட இருக்கிறது. சிற்றுண்டி விடுதி, உடற்பயிற்சி கூடம், திருமணம் நடத்தும் சிறிய ஆலயம் உள்ளிட்ட வசதிகளோடு அமைய உள்ள இருக்கும் இந்த ஹோட்டலில் ஒரு வாரம் தங்குவதற்கு ரூ.7 லட்சம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் இது வரை பணிகள் நிறைவடையவில்லை. ஹோட்டல் பணிகள் நிறைவடைந்தவுடன் இந்த ஹோட்டலில் தங்குவதற்கு முன் பதிவு செய்த 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் 13 ஆண்டுகளாக காத்திருக்கின்றனர்.
இந்த கடல் ஹோட்டலைப் பற்றி கூறும் நிர்வாகிகள், அனைத்துவிதமான பாதுகாப்புகளுடன் உருவாகும் இந்த ஹோட்டல் கடலுக்கு அடியில் மட்டும் இன்றி, கடலுக்கு மேலும் 51 அறைகள் கொண்டதாக இருக்கும். கடலுக்கு அடியில் வரவேண்டும் என்றால், மேலே உள்ள லிப்டை பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.


No comments:

Post a Comment