Tuesday, August 26, 2014

ஷிர்டி சாய்பாபாவை வழிபடக் கூடாது: வெடிக்கும் புதிய சர்ச்சை

ஷிர்டி சாய்பாபா கடவுளோ குருவோ அல்ல, அவரை வழிபடக் கூடாது என தீர்மானம் நிறைவேற்றியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
19ம் நூற்றாண்டில் இந்தியாவில் வாழ்ந்த ஷிர்டி சாய் பாபாவிற்கு கோடிக்கணக்கான பக்தர்கள் உள்ளனர்.
ஷிர்டியில் அவரது உருவச் சிலையுள்ள கோயிலுக்கு ஏராளமானோர் சென்று வழிபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் துவாரகை பீடத்தின் சங்கராச்சாரி ஸ்வரூபானந்த சரஸ்வதி தலைமையில் ராய்பூரில் இரண்டு நாள் மதக் கருத்தரங்கம் நடந்துள்ளது.
இதில், 19ம் நூற்றாண்டைச் சேர்ந்த துறவியான ஷிர்டி சாய்பாபா கடவுளோ குருவோ அல்ல, எனவே சனாதன தர்மத்தைப் பின்பற்றுவோர் அவரது உருவச் சிலையை வழிபடக் கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட சில மணி நேரத்தில், ராய்பூரிலிருந்து அருகேவுள்ள கவார்தாவில் திவ்ய சதுர்மாஸ் மஹோத்சவ் கமிட்டி இது தொடர்பாக ஒரு கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்துள்ளது.
அந்த கருத்தரங்கில் ஷிர்டி சாய் பாபா வழிபாட்டுக்கு எதிரான தீர்மானம் குறித்து விவாதித்தபோது, கூட்டத்தில் பங்கேற்ற ஷிர்டி சாய்பாபாவின் பக்தர்கள் சிலர் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மேலும், சாய் பாபா பக்தர்களும் சங்கராச்சாரியாரின் ஆதரவாளர்களும் கடும் வார்த்தை மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

No comments:

Post a Comment