Tuesday, August 19, 2014

மதுராவில் கட்டப்படவுள்ள உலகின் மிக உயரமான ஆலயம் !

உத்திரப்பிரதேசத்தின் மதுரா நகரில் 70 அடுக்குகளை கொண்ட உலகின் மிக உயரமான இந்து ஆலயத்தை கட்டுவதற்கு கட்டுமானப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டுவிழா நடந்துள்ளது.
கிருஷ்ண பரமாத்மா இளம்பருவத்தில் விளையாடிய இடமாக நம்பப்படும் மதுராவில் ஸ்ரீல பிரபுபாதா என்பவர் சந்திரோதயா மந்திர் என்ற பெயரில் கோவில் ஒன்றை நிறுவ விரும்பியுள்ளார்.
‘இஸ்கான்’ அமைப்பின் ஏற்பாட்டில் சுமார் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 213 மீட்டர் உயரத்தில் கட்டப்படவுள்ள இந்த கோவிலின் திட்டப்பணிகளை கடந்த ஹோலி பண்டிகையின்போது முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் தொடங்கி வைத்துள்ளார்.
இந்நிலையில், மதுரா தொகுதியின் எம்.பி. ஹேமா மாலினி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலர் பங்கேற்க கட்டுமானப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டுவிழா நேற்று தொடங்கியுள்ளது.
இந்த ஆலயத்தையொட்டி இருக்கும் 26 ஏக்கர் இடத்தில், புராணக் காலத்து பிருந்தாவனத்துக்கு நிகராகவும், கிருஷ்ணர் வாழ்ந்த காலத்தை பிரதிபலிக்கும் வகையிலும் இயற்கை வனப்புடன் கூடிய கிராமங்களையும் உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், சுமார் 700 அடி உயரம் கொண்ட இந்த ஆலயத்தின் உச்சி வரை சென்று வர ‘கேப்சூல் லிஃப்ட்’ வசதியும் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment