Sunday, August 24, 2014

கடற்கரையில் தண்ணீர் சறுக்கலில் ஈடுபட்டால் ஈராக் பிரச்சனையை சமாளிக்கலாம்: டேவிட் கமரூன் நம்பிக்கையை இழக்கிறார் !

ஈராக்கை அமெரிக்க படைகளும் , பிரித்தானிய படைகளும் இணைந்தே கைப்பற்றினார்கள். பின்னர் கூட பலகாலமாக இரு நாட்டு படைகளும் இணைந்து அங்கே நிலைகொண்டு இருந்தார்கள். பின்னர் அமெரிக்க மற்றும், பிரித்தானிய படைகள் மெல்ல மெல்ல ஈராக்கை விட்டு விலகி, அதிகாரத்தை ஈராக் அரசிடம் ஒப்படைத்தார்கள். அவர்கள் ஈராக்கை விட்டு வெளியேற முன்னர் ஈரக்கிற்கான இராணுவம் மற்றும் பொலிஸ் படைகளை அமைத்து அதற்கு பயிற்சிகளையும் வழங்கி இருந்தார்கள். ஆனால் படைகள் விலகிய பின்னர் ஐ.எஸ் ஐ.எஸ் என்னும் அமைப்பு உருவாகி, அவர்கள் ஈராக்கின் பல நகரங்களை கைப்பற்றினார்கள். சில நாட்களுக்கு முன்னரே அவர்கள் அமெரிக்க , ஊடகவியலாளரான ஜேம்ஸை கழுத்து வெட்டி கொலை செய்தார்கள்.
இதேவேளை பிரித்தானிய இளைஞர்கள் பலர், ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் இணைந்துகொண்டார்கள். பிரித்தானியாவில் பிறந்து வளர்ந்த முஸ்லீம் இளைஞர்கள் இவ்வாறு இந்த தீவிரவாத அமைப்பில் இணைவது பிரித்தானியாவை பொறுத்தவரை பெரும் தோல்வியாக கருதப்பட்டது. பிரித்தானியாவில் உள்ள எதிர்கட்சியினர், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறிவருகிறார்கள். நிலைமை கட்டுக்கு அடுங்காமல் போகும் இன் நிலையில், பிரித்தானிய பிரதமர் கோனிஷ் கடற்கரைக்கு சென்று, கடல் அலையில் சறுக்கும் விளையாட்டில் ஈடுபட்டு வருகிறார்.
இவ்வாறு இவர் கடற்கரையில் தனது விடுமுறையை கழித்து வருவது, அமெரிக்கா உட்பட பல பிரித்தானிய அரசில்வாதிகளை பெரும் அதிருப்திக்கு உள்ளாகியுள்ளது. அமெரிக்க ஊடகவியலாலர் ஜேம்ஸ் தலை வெட்டி கொல்லப்பட்ட அன்று உலங்கு வானூர்தி மூலம் லண்டன் வந்த கமரூன், நிலைமைகளை ஆராய்ந்துவிட்டு, மீண்டும் அதே இரவு கோனிஷ் கடற்கரைக்கு சென்றுவிட்டார். இதனை பிரித்தானிய அரசியல்வாதிகள் சற்றும் எதிர்பார்கவில்லை என்று கூறப்படுகிறது. அமெரிக்காவுக்கு இக்கட்டான சூழ் நிலை ஏற்படும் பட்சத்தில், அன் நாட்டுக்கு உதவாமல் டேவிட் கமரூன் இருப்பதாக பலர் கருதுகிறார்கள்.




No comments:

Post a Comment