Saturday, July 26, 2014

ஜட்டியில் குண்டைப் பொருத்தி அமெரிக்க விமானத்தை வெடிக்கவை முயற்சி: ஏன் வெடிக்கவில்லை என்ற சுவாரசியம் !




கடந்த 2009ம் ஆண்டு கிருஸ்மஸ் தினத்தில், அமெரிக்க விமானம் ஒன்றை நடுவானில் வைத்து வெடிக்க வைக்க, உமர் என்னும் இஸ்லாமியர் முயற்சி செய்தார். ஆம்ஸ்டடாமில் இருந்து மயாமி சென்ற விமானத்தில், இவர் தனது ஜட்டியில் குண்டு ஒன்றை பொருத்திக்கொண்டு ஏறி இருந்தார். குறித்த விமானம் அமெரிக்கவை நெருங்கியது, அல்லாகூ அக்பர் என்று கூறிக்கொண்டு தனது ஜட்டியில் உள்ள குண்டை இவர் வெடிக்க வைக்க அதிலுள்ள கருவியை இழுத்துள்ளார். என்ன ஆச்சரியம் ! குண்டு வெடிக்கவில்லை. அப்போது தான் அருகில் உள்ள நபர்களுக்கு தெரிந்தது இவரிடம் வெடி குண்டு இருக்கிறது என்று.
விமானத்தில் உள்ளவர்கள் அவரை மடக்கிப் பிடித்துவிட்டார்கள். ஆனால் இதுவரை காலமும் அக் குண்டு ஏன் அன்றைய தினம் வெடிக்கவில்லை என்ற கேள்வி நிலவி வந்தது. அந்த விமானத்தில் சுமார் 300 பயணிகள் இருந்தார்கள். அனைவரும் உயிர்தப்பியதே பெரிய விடையம். இன் நிலையில் 2012ம் ஆண்டு உமருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.  அமெரிக்க உளவு நிறுவனம்  அறிக்கையை சமர்பித்துள்ளது. அது என்னவென்றால் உமர் அணிந்திருந்த ஜட்டியில் உள்ள குண்டு ஏன் வெடிக்க வில்லை என்ற ரிப்போட் ஆகும்.
அதில் என்ன கூறப்பட்டுள்ளது என்று கேட்டால் நீங்கள் பட்டென்று சிரித்துவிடுவீர்கள். உமர் என்னும் இன் நபரிடம் யார் இந்த குண்டைக் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால் அவர் ஜட்டியை அப்படியே 2 கிழமை போட்டு இருந்துள்ளார். அவர் வேறு எந்த ஜட்டியும் மாற்றவில்லையாம். அதன் காரணமாக தான் குண்டு வெடிக்கவில்லை என்கிறார்கள்.

No comments:

Post a Comment