Wednesday, July 23, 2014

கல்யாணமான காவலரை காவெடுத்த கள்ளக்காதலி- தமிழகத்தில் திகைப்பு சம்பவம்.......

சிதம்பரம் அண்ணாமலைநகர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டராக இருந்தவர் கணேசன் (வயது 31). இவரது சொந்த ஊர் பண்ருட்டி .இவர் சிதம்பரம் சக்ராஅவென்யூ பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி இருந்தார். இவருக்கு கடந்த 9 ந்தேதி தான் திருமணம் நடந்து உள்ளது. இவரது மனைவி சத்யா.கணேசன் ஆடிமாதம் காரணமாக மனைவியை அவரது அம்மா வீட்டிற்கு அனுப்பி இருந்தார். நேற்று இரவு கணேசனின் மனைவி சத்யா கணேசனுக்கு போன் செய்து பார்த்தார் அவர் எடுக்கவில்லை இதனால் சத்யா சிதம்பரத்தில் உள்ள கணேசனின் உறவினர் மணிகண்டனுக்கு தகவல் தெரிவித்தார். அவர் கணேசன் வீட்டுக்கு வந்து பார்த்தார். வீடு வெளிபக்கமாக பூட்டப்படு இருந்தது.மணிகண்டன் ஜன்னலை திறந்து அவர் எட்டி பார்த்தபோது கணேசன் கட்டிலில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தது தெரிய வந்தது.. இதுபற்றி அவர் சிதம்பரம் அண்ணாமலைநகர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசார் விரைந்து வந்துபிணத்தை கைப்பற்றி அவர்கள் விசாரணை நடத்தினார்கள்.
அப்போது ஒரு பெண் அந்த வீட்டில் தங்கி இருந்ததாக தகவல் தெரிந்தது. அவர் கணேசனுடைய கள்ளக்காதலி வனிதா என்பதை தெரிந்து கொண்ட போலீசார் அவரை தேடினார்கள்.இந்த நிலையில் விருத்தாலசத்தில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது சேலம் செல்லும் பஸ்சில் கள்ளக்காதலி வனிதா ஏறி அமர்ந்து இருந்ததை கண்டுபிடித்தனர். அவரை அழைத்து சென்று விசாரித்த போது நான்தான் கணேசனை கொலை செய்தேன் என்று கூறினார். விசாரணையில் சிதமபரம் கிள்ளை குப்பத்தை சேர்ந்த கலைமணி என்பவருடைய மனைவி (வயது 25) என்பவருக்கும் விழுப்புரத்தை சேர்ந்த மினி பஸ் டிரைவர் ஒருவருக்கும் கள்ளக்காதல் இருந்து வந்தது. ஒருசமயம் கள்ளகாதலர்கள் போலீசில் மாட்டி கொண்டனர் அப்போது அந்த போலீஸ் நிலையத்தில் சப்- இன்ஸ்பெக்டராக இருந்த கணேசனுக்கும் வனிதாவுக்கும் தொடர்பு ஏற்பட்டது.
அடிக்கடி இருவரும் கணேசனின் குடியிருப்பு வீட்டில் சந்தித்து உல்லாசமாக இருந்தனர். இந்த நிலையில் கணேசனுக்கு திருமணமானது வனிதாவுக்கு பிடிக்கவில்லை. நேற்று மாலை வனிதா கணேசனை சந்திப்பதற்காக அவர் தங்கி இருந்த குடியிருப்புக்கு வந்து இருந்தார். இரவு இருவரும் சாப்பிட்டு விட்டு உல்லாசமாக இருந்தனர். கணேசன் மது குடித்துவிட்டு அயர்ந்து படுத்து தூங்கினார்.அப்போது வனிதா கணேசனை சரமாரியாக வெட்டினார். இதில் அந்த இடத்திலேயே கணேசன் ரத்த வெள்ளத்தில் பிணமானார். அதைத்தொடர்ந்து வனிதா வீட்டை வெளியே பூட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். .கணேசனை கொன்றதாக கள்ளக்காதலி வனிதா கைது செய்யப்பட்டுள்ளார். அவர் நான் மட்டும்தான் கொலை செய்தேன் என்று கூறியுள்ளார்.ஆனால் வனிதா கூலிப்படை யாரையாவது காரில் அழைத்து வந்து கொலை செய்திருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
வேறு பெண்ணை திருமணம் செய்ததால் வெட்டி கொன்றேன்: கள்ளக்காதலி வாக்குமூலம். சப்–இன்ஸ்பெக்டர் கணேசனை வெட்டிக் கொன்ற கள்ளக்காதலி வனிதா போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:–
கிள்ளை போலீஸ் நிலையத்தில் கணேசன் சப்–இன்ஸ்பெக்டராக இருந்த போது ஒரு விவகாரம் தொடர்பாக கணேசனை சந்திக்க வேண்டியிருந்தது. அப்போது எனக்கும், அவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. நாங்கள் இருவரும் அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தோம். கடலூர், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும் அவருடன் சென்று இருக்கிறேன். இந்த நிலையில் கிள்ளை போலீஸ் நிலையத்தில் இருந்து அவர் சிதம்பரம் அண்ணாமலைநகர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் வீடு எடுத்து தங்கினார். நானும் அங்கு சென்று அவருடன் அடிக்கடி தங்கினேன். இதற்கிடையே எங்களுடைய கள்ளக்காதல் விவகாரம் என்னுடைய கணவர் கலைமணிக்கு தெரியவந்தது. இதனால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. எனவே அவரை பிரிந்து சிதம்பரத்தை அடுத்த சி.முட்லூரில் உள்ள எனது தாயார் வீட்டுக்கு வந்துவிட்டேன்.
எனக்கு 7 வயதில் ஒரு குழந்தை உள்ளது. குழந்தையை எனது கணவரிடம் விட்டுவிட்டேன். கணேசனுடன் நான் கிட்டத்தட்ட கணவன் மனைவி போல வாழ்ந்து வந்தேன். அவர் என்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்திருந்தார். அதை நான் நம்பினேன். இந்த நிலையில் கடந்த 9–ந்தேதி அவர் எனக்கு தெரியாமல் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டது எனக்கு தெரியவந்தது. எனவே இதுபற்றி அவரிடம் பேசி சண்டை போட்டேன். அப்போது 22–ந்தேதி (நேற்று) சிதம்பரம் வருகிறேன். அங்கு நாம் பேசிக்கொள்ளலாம் என்று கூறினார். அதன்படி நேற்று அவர் வந்தார். ஆனால் என்னை ஏமாற்றிவிட்டு வேறு பெண்ணை திருமணம் செய்த அவரை தீர்த்துக்கட்ட வேண்டும் என்ற வெறியோடு நான் இருந்தேன். எனவே அரிவாள் ஒன்றை தயார் நிலையில் பையில் எடுத்து வைத்துக்கொண்டு அங்கு சென்றேன்.
வீடு அருகே சென்றதும் அரிவாளை அருகில் உள்ள செங்கல் குவியல் அருகே மறைத்து வைத்தேன். பின்னர் அவருடன் சென்று பேசிக்கொண்டிருந்தேன். கணேசனின் உதவியாளர் அய்யப்பன் வந்திருந்தார். அவரிடம் சாப்பாடு மற்றும் மது வாங்கி வரும்படி கணேசன் சொல்லி அனுப்பினார். அவர் வெளியே சென்று சாப்பாடு, மது வாங்கி வந்தார். அந்த நேரத்தில் வெளியே சென்ற நான் மறைத்து வைத்திருந்த அரிவாளை வீட்டிற்குள் எடுத்து வந்தேன். பின்னர் இருவரும் சாப்பிட்டு விட்டு உல்லாசமாக இருந்தோம். அவர் அதிகமாக மது குடித்து இருந்தார். இந்த களைப்பில் அயர்ந்து தூங்கினார். இதுதான் நல்ல சந்தர்ப்பம் என்று கருதிய நான் வெளியில் இருந்து ஒரு செங்கலை எடுத்து வந்தேன். அவரை வெட்டுவதற்கு வசதியாக அதை அவருக்கு கழுத்துக்கு கீழே வைத்தேன். பின்னர் அரிவாளால் கழுத்தை சரமாரியாக வெட்டினேன்.
இதில் அந்த இடத்திலேயே அவர் பிணமானார். அவர் இறந்ததை உறுதி செய்து கொண்ட நான் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றேன். எனது சேலையில் ரத்தக் கறை படித்து இருந்தது. எனவே இருட்டான ஒரு பகுதிக்கு சென்று வேறு சேலையை மாற்றிக்கொண்டேன். அவரை வெட்டிய அரிவாளை அங்குள்ள குட்டையில் வீசினேன். பின்னர் மெயின்ரோட்டுக்கு வந்த நான் ஆட்டோ பிடித்து பஸ் நிலையத்துக்கு வந்தேன். அங்கு விருத்தாசலம் செல்லும் பஸ் நின்று கொண்டிருந்தது. அதில் ஏறினேன். விருத்தாசலத்தில் இறங்கியதும் எங்கு செல்வது என்று தெரியவில்லை. பஸ் நிலையத்தில் சேலம் பஸ் ஒன்று நின்றுகொண்டிருந்தது. அதில் ஏறி அமர்ந்தேன். அப்போது போலீசார் என்னை கண்டுபிடித்து கைது செய்தனர். இவ்வாறு அவர் கூறினார்.
 

No comments:

Post a Comment