Wednesday, July 30, 2014

சிரியாவில் வெடித்து சிதறிய அமெரிக்க வாலிபர் : மதத்தின் பெயரால் சிரியாவில் ஒன்றிணையும் முஸ்லிம்கள் !!

அமெரிக்கா புளோரிடா கல்லூரியில் கல்வி கற்ற வாலிபர் ஒருவர் சிரியாவில் தற்கொலை குண்டுதாரியாக மாறி வெடித்து சிதறியுள்ளார். அவர் வெடித்து சிதறும் காட்சிகளும் இணையத்தில் பரவியுள்ளளன. இக்காட்சிகளை அல்-கைதாவுடன் தொடர்பு பட்ட குழுவொன்று இந்த காட்சிகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. மியாமில் இருந்து 130 கிலோ மீற்றர் தொலைவில் இவர் வசித்து வந்ததாக தெரிய வந்துள்ளது. வெடிகுண்டு தாக்குதல் மேற்கொள்ளுவதற்க முன்னர் இவர் சிரித்தபடி வீடியோவுக்கு காட்சி கொடுத்துள்ளார். இந்த வீடியோவின் பின்னணியில் அரேபிய இசை ஒன்றும் ஒலித்துக்கொண்டிருதது இவ்வாறு தாக்குதலை மேற்கொண்டு இறந்தவர் 22 வயதான மோனர் மொகமட் அபு சல்ஹா என்று அறியப்படுகின்றது.
சிரியாவில் இராணுவத்தினர் ஒன்று கூடும் விடுதி ஒன்றின் மீதே இவர் குறித்த தற்கொலைபடை தாக்குதலை மேற்கொண்டு தன்னை தானே வெடிக்கவைத்துள்ளார். மேலும் இந்த வீடியோவை வெளியிட்டுள்ள நுஸ்ரா முன்னணி என்றழைக்கப்படும் அமைப்பும் சர்வதேச ரீதியில் மாலைதீவு உள்ளிட்ட சிரியாவின் இடலிப் நகரில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுதாக்குதலுடன் தொடர்புபட்டுள்ளது. இந்த குண்டு தற்கொலை தாக்குதலை மேற்கொள்ளுவதற்கு முன்னர் இது தொடர்பில் கருத்துரைத்த அபு சல்ஹா, தான் சிரியா வந்திருந்த ஆரம்ப கட்டத்தில் துப்பாக்கி மற்றும் வெடிப்பொருள் வாங்குவதற்கு பணமில்லாமல் இருந்ததாகவும் தற்போது கடவுளின் பெயரால் தனக்கு தேவைப்பட்ட அனைத்தும் கிடைத்துள்ளதாகவும் பெருமையுடன் கூறியுள்ளார்.
மேலும் இத்தகைய போராட்டம் மூலம் தாங்கள் சொர்க்கத்திற்கு போவதாகவும் சொர்க்கமே சிறந்தது என்றும் தெரிவித்துள்ளார். புளோரிடாவில் அபு சல்ஹா கூடைப்பந்து அணியில் விளையாடி மக்கள் மத்தியில் பிரபல்யமானவர். அபு சல்ஹாவின் பெற்றோர் பெருமளவிலான கடைகளை நடத்திவருவதாக தெரிவிக்கப்படுகின்றது அபு சல்ஹா மேற்கொண்ட குறித்த தாக்குதலக்கு 16 தொன் எடையுள்ள வெடிப்பொருட்கள் பாவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் அபு சல்ஹா போன்று உலகெங்கிலும் இருந்து ஆயிரக்கணக்கான வெளிநாட்டு முஸ்லிம்களும் சிரியாவில் ஆட்சியமைத்துள்ள பஷார் அசாத்துக்கு எதிராக கடந்த 3 வருடங்களாக போராடும் அணிகளில் சேர்ந்து போராடி வருவதாக தெரியவந்துள்ளது.


 

No comments:

Post a Comment