Wednesday, July 23, 2014

மஹிந்த ராஐபக்சவின் பங்காளிக்கட்சி மிகவும் இடக்கு முடக்கான கேள்வி ஒன்றை எழுப்பி ...

மஹிந்த ராஐபக்சவின் பங்காளிக்கட்சி மிகவும் இடக்கு முடக்கான கேள்வி ஒன்றை எழுப்பி உலகத்தின் கவனத்தை இலங்கை மீது குவிய வைத்துள்ளது. கேள்வி கேட்டவர் ஒன்று சாதாரணமான ஒருவர் அல்ல அவர் ஜாதிக ஹெல உறுமயவின் தலைவரான ஒமல்பே சோபித தேரர் ஆவார். அவர் கேட்ட கேள்வியும் மிகவும் பரபரப்பினை ஏற்படுத்திய கேள்வியுமாகும்.
அவர் அவ்வாறு கேட்ட கேள்விதான் என்ன:-
அண்மையில் இலங்கையின் பல பாகங்களிலும் பெரும் அளவிலான போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டமை தொடர்பில் உலகப் போதைப் பொருள் மையமாக இலங்கை மாற்றமடைந்துள்ளது. போதைப் பொருள் கடத்தலுடன் அரசியல்வாதிகளுக்கு தொடர்பு இருப்பதாக கடுமையான குற்றச்சாட்டு சுமத்தப்படுகின்றது. குற்றச்செயல்கள் தொடர்பில் உலகம் உன்னிப்பாக அவதானிக்கின்றது. போதைப் பொருள் கடத்தலுடன் அரசியல்வாதிகளுக்கு தொடர்பு இருப்பதாக அரசியல்வாதிகளே ஒப்புக்கொண்டுள்ளனர். போதைப் பொருள் கடத்தலுடன் தொடர்புடைய சிறிய சிறிய நெத்தலிகளே கைது செய்யப்படுகின்றனர். சூறா போன்ற முக்கிய மீன்கள் கைது செய்யப்படுவதில்லை என்று பரபரப்பினை ஏற்படுத்திய கருத்தை தெரிவித்துவிட்டு
1-நாட்டுக்குள் போதைப் பொருள் கொண்டு வரும் முக்கியஸ்தர்கள் யார்?
2-பிடிக்கப்பட்ட போதைப் பொருளுக்கு என்னவாயிற்று?
3-இவை கோதுமை மாவாக மாறுகின்றனவா?
4-கொள்கலன் கணக்கில் பிடிபடும் போதைப் பொருட்களுக்கு என்ன நேர்கின்றது
என்று வெறும் 4 கேள்விகளை ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர் ஒமல்பே சோபித தேரர் கொழும்பில் இடம்பெற்ற ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளமை
முன்னைய போதை பொருடன் தொடர்பு பட்ட சம்பவங்கள்:-
1-பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட போதைபொருள் கண்டைனரில் அகப்பட்டமை
  
2-இலங்கைக்கு அனுப்பப்பட்ட போதைபொருள் வாகன உதிரிப்பாகத்தில் அகப்பட்டமை
  
3-களனியில் வாகனத்தில் கைப்பற்றப்பட்ட போதை பொருள்
 
4-கட்டுநாயக்காவால் தோடம்பழங்களுக்குள் கொண்டு வரப்பட்ட போதைபொருள்
  

No comments:

Post a Comment