Tuesday, July 29, 2014

சிரிய இராணுவத்தின் தலைகளை துண்டித்து ................. ஐஎஸ்.ஐ.எஸ் அமைப்பினர் கொடுரம் ......



ஈராக் மற்றும் சிரியாவில் இஸ்லாம் இராச்சியத்தை தோற்றுவிக்க போராடும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினர் பல்வேறு தாக்குதல்களை செய்துள்ளனர். ஈராக் மற்றும் சிரியாவில் பல நகரங்களை கைப்பற்றியும் தங்கள் படை பலத்தை காட்டிவருகின்றனர். சிரியாவில் இவ்வமைப்பினரால் கைது செய்யப்பட்ட 50 இராணுவத்தினரின் தலைகளை துண்டித்து தங்கள் சினத்தை தணித்துள்ளனர். இவ்வாறு துண்டிக்கப்பட்ட தலைகளை இவ்வமைப்பின் பூரண கட்டுப்பாட்டில் உள்ள ரக்கா நகரின் பல்வேறு பகுதிகளிலும் தடிகள் மற்றும் தூண்களில் கொழுவியுள்ளனர்.
இந்த அமைப்பினர் ரக்கா நகரின் வடபகுதியல் உள்ள இராணுவ முகாம் ஒன்றை தாக்கி 85 இராணுவத்தினரை கொன்றும் மேலும் 200க்கும் அதிகமானோரை காணாமல் போகச்செய்துள்ளனர். மேலும் இராணுவத்தினரை கைது செய்து தலையை துண்டித்துள்ளனர். முன்னரும் பல படுகொலைகளை செய்துள்ள இவ்வமைப்பு தற்போது தங்களின் புதிய பரிணாமத்தை இவ்வாறு காட்டியுள்ளனர். மறுபுறம் இணையத்தில் உலவும் கானொலி ஒன்று தலையற்ற உடல்கள் பரவிக்கிடப்பதனை காட்டுகின்றது. மறுபுறத்தில் இவ்வமைப்பினால் வெளிவிடப்பட்டுள்ள புகைப்படங்களில் இராணுவ முகாம் ஒன்று கைப்பற்றப்பட்ட நிலையில் அங்கிருந்த டாங்கிகள் ட்றக்குகள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட கட்டடம் ஒன்றின் மேல் பகுதியில் அவ்வமைப்பின் கொடியினை ஏற்றுவதனையும் காணக்கூடியதாக உள்ளது. இவ்வாது துண்டிக்கப்பட்ட தலைகளை தடிகளில் நட்டு நகர் பகுதி முழுவது காட்டுவதன் மூலம் அவ்வமைப்பு இன்னமும் உறுதியுடன் இருப்பதாகவே காட்டிக்கொள்ள முனைகின்றது.
இந்த சிரிய உள்நாட்டு யுத்தத்pனால் இன்று வரை 3 மில்லியன் மக்கள் ஏதிலிகளாகியுள்ளனர் மேலும் 170,000 உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளன.
 
  

No comments:

Post a Comment