Thursday, July 31, 2014

கழுகுகளின் கண்களுக்கு தப்பாத ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவரின் கைகடிகாரம்......

நீண்ட காலமாக உலகம் தேடிய ஒரு நபர் அண்மையில் வெளிவந்தார். வெளிவந்தவர் சும்மா இருக்க மாட்டாமல் உலகத்திற்கு அச்சுறுத்தல் கொடுக்கும் முகமாக ஒரு உரையையும் ஆற்றிச்சென்றார். அவர் வேறு யாருமல்ல ஈராக்கில் போராடிவரும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அல் பகாதி. ஈராக் மற்றும் சிரியாவில் இடம்பெறும் வன்முறைகள் மற்றும் படுகொலைகளுக்கும் மனிதாபிமானமற்ற முழுசெயற்பாடுகளுக்கும் காரணம் இவ்வமைப்பு என்றே உலகம் அறிந்திருந்தது.
இந்த நிலையில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் இவ்வமைப்பின் தலைவர் பற்றி ஏராளமான ஊகங்கள் இருந்து வந்துள்ள நிலையில் முதல் தடவையாக அவர் வெளிவந்து உரையாற்றியுள்ளார். ஆரம்பத்தில் சில காலம் யுத்தத்தில் காயமடைந்து விட்டார் என்றும் இறந்து விட்டார் என்றும் பல வகையான கட்டுக்கதைகள் உலவி வந்த வேளையில் இவரது உரை உலக நாடுகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருந்துள்ளது.
ஈராக்கின் மொசூல் நகரத்தில் உள்ள ஒரு பள்ளி வாசலில் இவர் ஆற்றியிருந்த 21 நிமிட உரையில் உலக நாடுகளை எச்சரிக்கும் வசனங்கள் பல இருந்துள்ளன. மேலும் உலக முஸ்லிம்களை தனது புதிய ராஜ்ஜியத்திற்கு வருமாறும் அழைப்பு விடுத்திருந்தார். மறுபுறத்தில் அவரது உடையலங்காரத்தையும் அவரது அங்க அசைவுகளையும் அவதானித்த சில கழுகு கண்கள் புதிய சில விடயங்களை அவதானித்துள்ளன. அந்த வகையில் அவர் 1995 களில் ஆங்கில துப்பறியும் கதாநாயகன் ஜேம்ஸ் பொண்ட் கால கைக்கடிகாரம் அணிந்திருந்தமை தெரியவந்துள்ளது. அனைத்து முஸ்லிம்களும் அணியும் அதே உடை உடுத்தியிருந்த அவர் கையில் அணிந்திருந்த 6500 டொலர் பெறுமதியான கைக்கடிகாரம் பளிச் என்று மின்னியுள்ளது. இக்கடிகாரம் றொலக்ஸ் அல்லது செகொண்டா அல்லது ஒமேகாவின் சீ மாஸ்டராக இருக்கலாம் என்று எண்ணப்படுகின்றது.
 




No comments:

Post a Comment