Monday, July 28, 2014

தான் ஒரு பெண் என்பதனை 10 வருடத்தின் பின்னர் தெரிந்துகொண்ட ஆண் - சீனாவில் ஒரு அதிர்ச்சி சம்பவம்!




இந்த சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது. திருமணமாகி 10 வருட காலமாக தனது மனைவியுடன் திருப்தியான தாம்பத்திய உறவு வைத்திருந்த 44 வயதான ஷெஜியாங் மாகாணத்தை சேர்ந்த தனது மனைவியுடன் வைத்தியசாலைக்கு சென்றபோதே இந்த உண்மை தெரியவந்துள்ளது. குறித்த நபர் வைத்தியசாலைக்கு வயிற்று வலி என்றும் தனது சிறுநீருடன் இரத்தம் செல்வதாகவும் கூறியே வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். வைத்தியர்கள் மேற்கொண்ட பரிசோதனையின் பின்னர் அவர் தனது மாதவிடாய் காலத்தில் உள்ளதாலேயே இவ்வாறு சிறுநீருடன் இரத்தம் செல்வதாகவும் வைத்தியர்கள் கண்டறிந்துள்ளனர்.
மேலும் மருத்துவ பரிசோதனையின் பிரகாரம் புற உடலில் ஆண் உறுப்பையும் உடலின் உள்ளே முற்றாக வளர்ந்த பெண் ஒருவருக்கு இருக்க வேண்டிய கருப்பை மற்றும் இரண்டு சூலகங்களை கொண்டிருந்தமை குறித்த நபரையும் மட்டும் அல்லாமல் வைத்தியர் குழாமையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. மேலும் வைத்தியர்கள் அவரது குரசோமகளையும் பரிசோதித்ததில் அவர் பெண் ஒருவருக்கான எக்ஸ்.எக்ஸ் குரசோம்களை கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். அனைத்தையும் விட குறித்த நபர் தான் பூரணமான மற்றும் திருப்திகரமான தாம்பத்ய வாழ்க்கையை கொண்டுள்ளதாக கூறி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளார். மேலும் குறித்த நபருடைய சனனத்தொகுதி மற்றைய முழு வளர்ச்சியடைந்த ஆண்களைபோன்று அல்லாமல் வித்தியாசமாக உள்ளதாகவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் குறித்த நபர் ஆண்களை போன்று உடை உடுத்தி குட்டை முடி தரித்திருந்த காரணத்தினால் அவரை பெண் என்று சந்தேகம் கொள்ளவில்லை என்றும் பரிசோதனையின் பின்னரே தெரிய வந்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.
குறிப்பு இந்த செய்தியை வாசிக்கும் பல அதிர்வு வாசகர்களுக்கு மனதில் கேள்விகள் எழலாம். ஆயினும் அத்தகைய கேள்விகளுக்கு குறித்த நபர்தான் பதில் கூற வேண்டும் ஆயினும் சில மருத்துவ குறிப்புக்களை அதிர்வு தன் வாசகர்களுக்கு தர விரும்புகின்றது
1- இவ்வாறான பிறப்புக்களை இன்ரசெக்ஸ் என்று கூறலாம். ஓவ்வொரு 20000 வது பிறப்பும் இவ்வாறு அமையம். பிரித்தானியாவில் இத்தகைய 30000 மக்கள் உள்ளதாக புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது
2- இவர்கள் தோற்றத்தில் ஆண்களாக தோற்றமளிப்பர். ஆனால் பெண்கள். ஆண் உறுப்பை கொணடிருப்பர் ஆனால் அது முற்றாக வளர்ச்சியடைத்திருக்காது.
3- மார்பகம் சிலவேளைகளில் வளர்ச்சியடைந்திருக்கலாம். ஆண்களைப்போன்றே உயர் தொனியில் பேசவல்லவர்கள்
4- பெண்களான இவர்கள் ஆண்கள் போன்று உயிரணுக்களையும் உற்பத்தி செய்வர். சிலர் அபூர்வமாக முட்டைகளையும் உற்பத்தி செய்வர்.

No comments:

Post a Comment