Sunday, June 29, 2014

டெங்கு நோயும் இலங்கையின் சுற்றுலாத்துறையை பாதித்துள்ளது!

இலங்கை தற்போது சுற்றுலா மற்றும் வர்த்தகத்துக்கு பயங்கரமான நாடாக மாறியுள்ளது. இதற்கு அரசியல் பிரச்சினை மட்டும் காரணமல்ல. டெங்கு நோயின் பரவலும் காரணம் என்று சர்வதேச செய்தி ஒன்று தெரிவிக்கிறது.
இலங்கையில் தற்போது 17ஆயிரம் பேர் டெங்குவினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 50 பேர் வரை பலியாகியுள்ளனர்.
இது தொடர்ந்தும் நீடிக்குமானால் சுற்றுலாத்துறையை டெங்கு நோய் தாக்கம் பாரியளவில் பாதிக்கும் என்று சர்வதேச செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் டெங்கு நோய் பரவல் தொடர்பில் அமெரிக்கா தமது பிரஜைகளுக்கு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
அவுஸ்திரேலியாவும் டெங்கு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
பிரித்தானியாவும் தமது பயண அறிவுறுத்தலில் இலங்கையில் டெங்கு நோய் தாக்கம் தொடர்பாக எச்சரிக்;கையை விடுத்துள்ளது.
இலங்கையில் தெஹிவளை, கல்கிஸ்ஸை, நீர்கொழும்பு, களுத்துறை, காலி,  மாத்தறை, இரத்தினபுரி, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய இடங்களில் டெங்கு நோய் பரவல் ஏற்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyGRdLbmv5.html

No comments:

Post a Comment