Sunday, June 29, 2014

அடேங்கப்பா துணிந்த சிறுவன் தான்: தானும் மகாராணியும் சேர்ந்து நின்றது போல போட்டோ எடுத்தான் !


நேற்று முன் தினம் பிரித்தானிய மகாராணி எலிசபெத் அவர்கள் வட அயர்லாந்துக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். வரலாற்று புகழ் மிக்க சந்தை ஒன்றுக்கு அவர் சென்றவேளை அவருக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டது. இருப்பினும் கூட்டத்தில் திடீர் என்று புகுந்த 14 வயதுச் சிறுவன் ஒருவன் தனது மோபைல் போனில் தன்னையும் மாகாராணியையும் இணைத்து போட்டோ எடுத்துக்கொண்டான். திடீரென இச்சிறுவன் இவ்வாறு குறுக்கே வருவான் என்று எவரும் எதிர்பார்கவில்லை. இது ஒரு புறம் இருக்க மகாராணியின் பாதுகாப்புக்கு வந்த ஆட்கள் ஒரு கணம் திணறிப்போனார்கள். குறித்த சிறுவனை கைதுசெய்வதா இல்லையே என்று அவர்கள் யோசிக்க முன்னரே அவன் பல போட்டோக்களை அப்படியே கிளிக் செய்துவிட்டான்.
ஆனால் மகாராணியோ புன்முறுவலோடு அப்படியே அச்சிறுவனை பார்த்துக்கொண்டு அவனை தாண்டி நடந்துசென்றுவிட்டார். அவர் புன்முறுவலை பார்த்த பாதுகாப்பு அதிகாரிகளுக்கு ஒருவிடையம் நன்றாக தெரிந்துவிட்டது. அது என்னவென்றால் மகாராணி சற்றும் ஆத்திரப்படவில்லை என்பது தான். அதனால் அவர்களும் அச்சிறுவனை எதுவும் செய்யவில்லை. அப்படியே விட்டுவிட்டார்கள். ஆனால் இந்த விடையம் சென்னையில் நடந்தால் எப்படி இருக்கும் தெரியுமா ? அதுவும் சீவேலப்பிரி பாண்டி ! கறுப்பு சிங்கம் கேப்டன் விஜயகாந்துக்கு இப்படி நடந்திருந்தால், இச்சிறுவன் கன்னம் பழுத்திருக்கும் இல்லையா ? இது தான் வித்தியாசம் !

No comments:

Post a Comment