Friday, June 27, 2014

லண்டனில் இசி சிகரெட் பெட்டிகள் இப்படி தான் இருக்கும் என்கிறார்கள்: பார்கவே பயங்கரமாக உள்ளது !

லண்டனில் இனி கடைகளில் விற்கப்படும் எல்லா சிகரெட் பாக்கெட்டிலும் இனி இப்படியான படங்களே இருக்கும் என்ற செய்தி கசிந்துள்ளது. பிரித்தானிய சுகாதார அமைச்சு இந்த புது கட்டுப்பாட்டை கொண்டுவரவுள்ளது. லண்டனில் விற்க்கப்படும் எல்லா சிகரெட் பாக்கெட்டுகளிலும், இனி ஒரு குழந்தையின் படம் இருக்கும். குறித்த அந்த குழந்தை சிகரெட் புகைப்பதால் ஏற்படும் புகையை தடுக்க முகமூடி ஒன்றை அணிந்திருப்பது போல இந்த படம் அமைந்துள்ளது. இனி கட்டாயமாக இந்த படத்தை அனைத்து கம்பெனிகளும் தமது பாக்கெட்டில் அச்சிடவேண்டி இருக்கும்.

அதில் "நீங்கள் புகைப்பதால் நீங்கள் மட்டும் அல்ல உங்கள் குடும்பமே பாதிக்கிறது" என்ற வாசகங்கள் எழுதப்பட்டுள்ளது. அத்தோடு உங்கள் குழந்தைகளின் உடல் நலத்திற்கும் கேடு என்று எழுதப்பட்டுள்ளது. இதனைப் பார்க்கும் மற்றும் வாசிக்கும் ஒருவ்வொரு அப்பாவும், சிகரெட் பழக்கத்தை விட்டுவிடவேண்டும் என்று ஒரு கணம் நினைப்பார்கள் அல்லவா ? அதனை தான் பிரித்தானிய சுகாதார அமைச்சு எதிர்பார்கிறது.


No comments:

Post a Comment