Tuesday, May 27, 2014

அன்று உதிர்த்த வார்த்தைகள் இன்று அருங்காட்சியகத்தில்: அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல்!

அமெரிக்காவில் நடைபெற்ற “டுவின் டவர்ஸ் 9/11” சம்பவத்தை நேரில் பார்த்த பெண்மணி கூறிய வார்த்தைகள் தற்போது திறக்கப்பட்ட அருங்காட்சியத்தின் சுவரில் பதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் திகதி அமெரிக்காவில் உள்ள உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுரத்தை முஸ்லீம் தீவிரவாத அமைப்பான அல்கொய்தா தகர்த்தது.
இதில் மறைந்த 3000 நபர்களின் நினைவாக அமெரிக்காவில் அருங்காட்சியம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை நியூயோர்க் நகரில் வசித்து வந்த லூசா கிரிப்த் (47) என்பவர் நேரில் பார்த்துள்ளார், மக்கள் அதிலிருந்து உயிர் தப்புவதற்காக கட்டிடத்தில் இருந்து குதித்ததாக இவர் தெரிவித்துள்ளார்.
இதனை பார்த்து இவர் “ they were ending their lives without a choice and to turn away from them would have been wrong ” கூறி இந்த வார்த்தைகளானது தற்போது நினைவு அரங்கத்தின் சுவரில் பதிக்கப்பட்டுள்ளது.
இவர் இதனை காண்பதற்காக நார்ச்சாவிலிருந்து வந்துள்ளார்.

No comments:

Post a Comment