Wednesday, May 28, 2014

மலேசிய விமானம்: பாதை பற்றி புதிய தகவல்

மாயமாய் மறைந்த மலேசிய விமானம் பறந்த பாதை பற்றி புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த மார்ச் மாதம் 8ம் திகதி கோலாலம்பூரிலிருந்து, சீன தலைநகர் பீஜிங்கிற்கு புறப்பட்டு சென்ற எம்எச்,370 ரக போயிங் விமானம் மர்மமான முறையில் மாயமானது.
இந்த விமானம் இந்திய பெருங்கடல் பகுதியின் தெற்கே விழுந்தது. இந்த விமானத்தில் 5 இந்திய பயணிகள் உள்பட 239 பேர் இருந்தனர்.
மாயமான விமானத்தின் கறுப்பு பெட்டியையும், அதன் நொறுங்கிய பாகங்களையும், பயணம் செய்தவர்களின் உடல்களையும் தேடும் முயற்சி 2 மாதங்கள் நடந்தும் மாயமான விமானம் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதனையடுத்து விமானம் பறந்து சென்ற பாதையை கண்டறிய இங்கிலாந்தைச் சேர்ந்த செயற்கைகோள் தயாரிக்கும் நிறுவனமான இன்மார்சாட்டின் உதவியை மலேசிய சிவில் விமான போக்குவரத்து துறை நாடியது.
அதன்படி இன்மார்சாட் நிறுவனம் தயாரித்து அளித்த 47 பக்க தகவல்கள் விமான விபத்தில் பலியானவர்களின் உறவினர்களுக்காக நேற்று வெளியிட்டது.
அதில் விமானம் பறந்து சென்ற பாதை பற்றி பக்குவப்படுத்தப்படாத புள்ளி விவரங்கள் மற்றும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளன.

No comments:

Post a Comment