Thursday, May 29, 2014

சர்வதேச விண்வெளி மையத்தில் ஆய்வு: கைகோர்க்கும் விண்வெளி வீரர்கள் (வீடியோ இணைப்பு) !

ரஷ்யாவில் சர்வதேச விண்வெளி மையத்தை நோக்கி ஏவுகணையில் மூவர் பறந்து சென்றுள்ளனர்.
கடந்த 22ம் திகதி ரஷ்யாவில் உள்ள கசகஸ்தானிலிருந்து "சோயஸ் பூஸ்டர்" என்ற ஏவுகணை சர்வதேச விண்வெளி மையத்தை நோக்கி தனது பயணத்தை தொடங்கியுள்ளது.
இதில் பயணம் செய்த நாசாவை சேர்ந்த ரீட் ஒய்ஸ்மென், ரஷ்யாவை சேர்ந்த மேக்ஸ் சுராயேவ் மற்றும் ஜேர்மனியை சேர்ந்த அலெக்சாண்டர் க்ரெஸ்ட் ஆகிய மூவரும் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்று ஆய்வு நடத்தவுள்ளனர்.
இன்று சர்வதேச விண்வெளியை அடையவிருக்கும் இந்த ஏவுகணையில் உள்ள விண்வெளி வீரர்கள் கடந்த மார்ச் மாதம் பயணித்து ஆய்வில் ஈடுபட்டிருக்கும் இரு ரஷ்ய விண்வெளி வீரர்கள் மற்றும் ஒரு அமெரிக்க விண்வெளி வீரருடன் இணைந்து செயல்படபோவதாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டாலும் இரு நாட்டு விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களும் இணைந்து செயல்படுவது குறிப்பிடத்தக்கது.
http://www.newsonews.com/view.php?22eMM303lOS4e2BnBcb280Cdd308Wbc2nBVe43Olx0226AU3

No comments:

Post a Comment