Friday, May 23, 2014

பாகிஸ்தான் பிரதமருக்கு சுடச்சுட கோழி பிரியாணி பரிமாறும் மோடி: சசிதரூர் பதிலடி!

பாகிஸ்தான் பிரதமருக்கு, நரேந்திர மோடி கோழி பிரியாணி பரிமாறுவார் என சசிதரூர் கூறியுள்ளார்.
கடந்த மார்ச் மாத இறுதியில் பாக்பத் பகுதியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பேசிய மோடி, கடந்த 2013-ல் இந்திய- பாகிஸ்தான் எல்லையில் இரு இந்திய ராணுவ வீரர்கள் தலை துண்டித்துக் கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தான் இதுபோன்ற செயலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது, இந்தியாவுக்கு தனிப்பட்ட முறையில் வந்த பாகிஸ்தான் பிரதமர் பர்வேஸ் அஷ்ரபுக்கு காங்கிரஸ் அரசாங்கம் கோழி பிரியாணி வழங்கி விருந்தளித்துக் கொண்டிருக்கிறது என்று குற்றம் சாட்டினார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, மோடியின் பதவியேற்பு விழாவுக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் உள்பட சார்க் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் அனைவருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
மோடியின் பதவியேற்பு விழாவுக்கு விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் இந்தியாவுக்கு வந்தால், அவருக்கு நரேந்திர மோடி கோழி பிரியாணி பரிமாறுவார் என நம்பலாம் என்று காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் கூறியுள்ளார்.
அதே சமயம், மோடியின் சமரச நோக்குடைய உரையால் தான் மிகவும் கவரப்பட்டதாகவும் தரூர் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment