Wednesday, April 30, 2014

பிரித்தானிய உளவுத்துறை MI 6 ஆட்கள் தேவை: பகிரங்க விளம்பரம் !

பிரிட்டிஷ் உளவுத்துறையான MI 6 -க்கு, பத்திரிகைகளில் விளம்பரம் ஒன்று செய்துள்ளது. உளவாளிகளை பணியில் அமர்த்த வேண்டிய அவசர தேவை ஏற்பட்டு உள்ளது என அது மேலும் அறிவித்துள்ளது. பிரித்தானிய குடியுரிமை பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அது மேலும் அறிவித்துள்ளது. புதிதாக பணியில் அமர்த்தப்படவுள்ள உளவாளிகள், தமது பணியில் என்னதான் செய்ய வேண்டும் என்பதுகூட வெளிப்படையாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய மொழி பேசக்கூடியவர்களாக இருப்பின் அது நல்லது என்பதும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல துறை சார் இடங்கள் MI 6 உளவுப் பிரிவில் காலியாக உள்ளதாக கூறப்படுகிறது. இதேவேளை “ரஷ்ய மொழியில் மேற்கொள்ளப்படும் போன் உரையாடல்களை ஒட்டுக் கேட்க வேண்டும். ரஷ்ய மொழியில் அனுப்பப்படும் இ-மெயில்களை இடைமறித்து படிக்க வேண்டும்” இதுபோன்ற வேலைகளைச் செய்யக்கூடியவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. என்னதான் ரஷ்ய மொழி தெரிந்த ஆட்களை உளவு பார்க்கும் பணியில் அமர்த்துவது பிரிட்டனில் சற்றே சிரமமானது என்றாலும், இப்படி வெளிப்படையாக செய்யப்படும் விளம்பரம், ஏதேதோ சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. “இதன் மூலம், ரஷ்யாவுக்கு ‘ஏதோ’ மெசேஜ் கொடுக்கிறதா, பிரிட்டன் ? 

“விண்ணப்பிக்கும் நபர்கள், பிரிட்டிஷ் பிரஜைகளாக இருக்க வேண்டும். ரஷ்ய மொழி உரையாடல்களை துல்லியமாக புரிந்து கொள்ளும் விதத்தில் வட்டார ஸ்லாங்குகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும்” என கூறும் உளவுத்துறை விளம்பரம், “வருடாந்த ஊதியமாக £30,000 ($50,000) வழங்கப்படும்” என்கிறது.


No comments:

Post a Comment