Wednesday, April 30, 2014

புலிகள் பயன்படுத்திய மிதிவெடிகள் என மாணவர்களுக்கு பாடம் நடத்திய இராணுவம் !


மிதிவெடி மற்றும் வெடிபொருட்கள் தொடர்பாக கிளிநொச்சி பிரதேச பாடசாலை மாணவர்களுக்கு நேற்று பாடம் ஒன்றை எடுத்து, அனுப்பியுள்ளார்கள் இராணுவத்தினர். கிளிநொச்சி படை தலைமையகத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வில் விடுதலைப்புலிகள் பயன்படுத்திய வெடிபொருட்கள் என மிதி வெடிகள், மற்றும் கண்ணிவெடிகள் மாணவர்களுக்கு காண்பிக்கப்பட்டதுடன் அவை தொடர்பாக விழிப்பாக இருக்க வேண்டும் எனவும் பாடமெடுத்துள்ளனர் இராணுவத்தினர். 

பல அரசசார்பற்ற நிறுவனங்களின் நிதியுதவியுடன் இராணுவத்தினால் மேற்கொள்ளப்படும் மிதிவெடி அகற்றும் பிரிவே இச் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தது என அதிர்வு இணையம் மேலும் அறிகிறது. கண்ணிவெடிகளை அகற்றும் இயந்திரங்கள் பலவற்றையும், உபகரணங்கள் பலவற்றையும் இராணுவத்தினர் மாணவர்களுக்கு காட்டியுள்ளார்கள். இதேவேளை புலிகளே கண்ணிவெடிகளை புதைத்தார்கள் என்றும், தாம் அதனை தற்போது அகற்றிவருவதாகவும், பாடம் கற்பித்துள்ளார்கள் இராணுவத்தினர். 



கிளிநொச்சியில் உள்ள பல மாணவ மாணவியரை இன் நிகழ்வுக்கு இராணுவத்தினர் அழைத்து இவ்வாறு கருத்துக்களை கூறியுள்ளமை, இளையோர்கள் மனதில் புலிகள் தொடர்பாக தவறான எண்ணத்தை வளர்க்கவேண்டும் என்ற நோக்கில் , செய்யப்பட்டுள்ளது. இதேவேளை இராணுவத்தின் பகுதிக்குள் இருக்கும் கண்ணிவெடிகளை யார் புதைத்தார்கள் என்று எவரும் திரும்பி கேட்கவில்லை. சிங்கள இராணுவத்தினர் புலிகளை பெரும் பயங்கரவாதிகல் போல தமிழ் இளையோர் மத்தியில், பரப்புரைகளை திட்டமிட்ட வகையில் மேற்கொண்டு வருகிறார்கள் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.


http://athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6762

No comments:

Post a Comment