Friday, April 25, 2014

பிரான்சில் களைகட்டிய ஹிட்லர் பிறந்த நாள் விழா!


பிரான்ஸ் நாட்டில் ஹிட்லரின் பிறந்த நாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸில் உள்ள ஓட்டிங் என்ற கிராமத்தில் 200 நபர்கள் பிறந்தநாள் கொண்டாடப்போகிறோம் என்று அந்த கிராமத்தின் மேயரிடம் அனுமதி கோரியுள்ளனர்.
இதற்கு அனுமதியளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த கும்பல், ஆரவாரமாக பிறந்தநாள் கொண்டாடி கூச்சல் போட்டுள்ளனர்.
இவர்கள் போட்ட கூச்சலால், பொலிசார் அந்த இடத்திற்கு சென்று பார்க்கையில், அங்கு ஹிட்லரின் 125வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து இந்த விழாவிற்கு அனுமதியளித்த மேயரிடம் கேள்வி எழுப்பியுள்ளனர், ஆனால் மேயரோ, தனக்கு ஹிட்லரின் பிறந்தநாள் விழா தான் கொண்டாடப்படுகிறது என தெரியாது என்றும் அவர்கள் போலியான ஆவணங்களை காட்டி என்னை ஏமாற்றிவிட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் இது தொடர்பாக மேயரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
http://world.lankasri.com/view.php?224MM303lOe4e2BnBcb280Cdd308Mbc3nBTe42OlJ0236Ao3

No comments:

Post a Comment