Saturday, April 26, 2014

கனடா: தாய் தன்னையும் கொன்று கடுமையான மன இறுக்கத்தில் இருந்த தனது மகனையும் கொன்றுள்ளார்.


வன்கூவர்- பிறின்ஸ் றுப்பேட்டில் இடம்பெற்ற கொடூரமான ஒரு குடும்ப சோக சம்பவம், தங்கள் பிள்ளைகளின் மன இறுக்கத்தையும் அதனை குணப்படுத்துவதற்கான வழிவகைகள் பற்றாக்குறையும் எத்தகைய மன அழுத்தத்தை பெற்றோர்கள் எதிர்கொள்ள முடியும் என்பதை வெளிபடுத்தியுள்ளன.
அஞ்சி றொபின்சன் என்பவரின் 16-வயது மகன் றொபி மன இறுக்க நோய்க்கு ஆளாகி வன்முறைமிக்கவராகவும் கட்டுப்படுத்த முடியாதவராகவும் மாறினார்.
அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ஓய்வு பாதுகாப்பும் பலனளிக்கவில்லை.
அதனால் றொபிக்கு சிறப்பு தேவைகளுடனான வதிவிட வசதியை வழங்குமாறு கேட்டதாகவும் ஆனால் தற்போது எதுவும் இல்லை என கூறப்பட்டுள்ளது.
இதனால் தாயார் தன் மகனை கொன்று விட்டு தன்னையும் கொன்றுள்ளார்.
இச்சம்பவம் இன்னுமொரு சோக உதாரணமெனவும் மன இறுக்கத்திற்கும் குடும்பத்தினருக்கும் உதவுவதற்கு போதிய அளவு நிதி வசதி இல்லை என்பது தெரியவருகின்றதென மன இறுக்க வழக்குரைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
இத்தகைய மோசமான சூழ்நிலையில் இருக்கும் குடும்பத்தினருக்கு உண்மையிலேயே ஆதரவு கிடைக்கும் என்ற உத்தரவாதம் வழங்கப்பட வேண்டுமென்றும் கூறப்பட்டுள்ளது.
அமைச்சினால் வழங்கப்படும் சகல சேவைகளும் மாகாணம் பூராகவும் கிடைக்க கூடியதாக உள்ளதென குழந்தை மற்றும் குடும்ப மேம்பாட்டு அமைச்சர் ஸ்ரெபனி காடியக்ஸ் தெரிவித்துள்ளார். மரணமடைந்த அஞசி மற்றும் றொபி றொபின்சனின் மரணம் சம்பந்தமாக பொது விசாரனைக்கு உத்தரவிடுவாரா என கேட்கப்பட்டபோது இக் கேள்விக்கு பதில் கூறமுடியாதென கூறியுள்ளார்.
kill
- See more at: http://www.canadamirror.com/canada/25131.html#sthash.6FweasNc.dpuf

No comments:

Post a Comment