Thursday, April 17, 2014

அந்நிய மோகத்தின் தாக்கம் நம் கலாச்சாரம் பண்பாட்டின் மீது சாடல் !!

அந்நியன் தந்த தேவையற்ற ,பிரயோசனமில்லாத,பணவிரயம் தரும் கொண்டாட்டங்களை மகிழ்வுடன் கொண்டாடும் நம்மவர் அதாவது அந்நிய அடிமைகள் வாழ்வில் ஒருமுறை மட்டுமே கொண்டாடும் பூப்புனித நீராட்டுவிழாவை தவறு என்பது நகைப்புக்கிடமானது!மகள் பருவ வயதை அடைந்ததை தாய்க்கு தெரிவிக்க அதை அவர்கள் உறவுகளுக்கு தெரிவித்து சடங்கு செய்வது தமிழர் பாரம்பரியம்,அதில் பாதுகாப்பு,உரிமை சம்பந்தமான விடயங்கள் அடங்கியுள்ளன,பாசம் வெளிப்படுத்தப்படுகிறது,உறவுகள் பிணைக்கப்படுகின்றன!


பிறந்தநாள்,கல்யாணநாள் ,காதலித்த நாள்.....என்று வருடாவருடம்  பணவிரயமாக்கும் நாம்,காதலர் தினம் என்று குடித்து  கும்மாளமடிக்கும்  நாம்,டிஸ்கோ ,பாப் என்று சென்று பணம் செலவு செய்து பருவக் கிளர்ச்சி செய்யும் நாம்,ஆண்களுக்கு இணை என்று பெண்களும் குடித்து வாந்தி எடுக்கும் நிலையில் உள்ள நாம் சாமத்திய சடங்கு தவறு என்பது சிரிப்புக்குரிய விடயம்!இதில் மற்றவை எல்லாம் பெற்றோர் பணத்தில் இளையோர் நாசமாகும் தினங்கள்!இது மட்டுமே பெற்றோர் விரும்பி கொண்டாடும் தினம்!

பூப்புனித நீராட்டு விழா என்றால் என்ன தமிழ் அல்லாத நண்பர்கள் தன்னிடம் கேட்பதாக கனேடிய தமிழ் யுவதி

Srilanka-Kiru
http://www.jvpnews.com/srilanka/65836.html

No comments:

Post a Comment