Saturday, March 15, 2014

ரன்பீர் கபூருக்கு லிப் லாக் முத்தம் கொடுக்க ஆசைப்படும் ஆண்ட்ரியா !



சினிமாவில் ஆண்ட்ரியாவுக்கு பின்னணி பாடகி, நடிகை என்ற இரண்டு முகம் உள்ளது. இதில் நடிகை முகத்தை விட பாடகி என்கிற முகம்தான் அவரை ஆபாசமாக சித்தரித்தது. 3 படத்தில் அனிருத்தின் இசையில் பாட சென்றபோதுதான், அவருடன் ஆண்ட்ரியாவுக்கு நட்பு ஏற்பட்டது. ஆனால், குறுகிய காலத்திலேயே அவர்கள் நட்பு கன்னாபின்னாவென்று வளர்ந்து நின்றது.

அதையடுத்து, அப்படத்தின் பாடல்கள் மிகப்பெரிய ஹிட்டானதும், தனது நெருக்கமான நண்பர்களுக்கு பார்ட்டி கொடுத்தார் அனிருத். அதில் ஆண்ட்ரியாதான் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது ஏற்கனவே அவர்களுக்கிடையே இருந்த நட்பு இன்னும் இறுக்கமானது. அதன்விளைவாக, இருவருமே தன்னை மறந்து ஆட்டம் பாட்டம் நடத்தியபோது மாறி மாறி உதடு கவ்வி முத்தம் கொடுத்துக்கொண்டனர். ஆனால், நான்கு சுவருக்குள் நடந்த அந்த அத்துமீறல் இணையதளங்களில் வெளியானபோது அதிர்ச்சியடைந்த ஆண்ட்ரியா, இது அனிருத்தின் வேலைதான் என்று அவருடனான நட்பை முறித்துக்கொண்டார்.

அதன்பிறகு முத்த சமாச்சாரங்களில் அடக்கிவாசித்து வரும் ஆண்ட்ரியா, இப்போது பாலிவுட் நடிகர் ரன்பீர்கபூருக்கு லிப் லாக் முத்தம் கொடுத்து நடிக்க ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார். மேலும், விஸ்வரூபம்௨ படம் தமிழைப்போலவே இந்தியிலும் வெளியாகயிருப்பதால், அதன்பிறகு நான் பாலிவுட் படங்களிலும் நடிக்க முயற்சி எடுப்பேன், அப்போது ரன்பீருடனான எனது லிப் லாக் ஆசையை நிறைவேற்றிக்கொள்வேன் என்றும் தெரிவித்துள்ளார் ஆண்ட்ரியா. அவரது இந்த வெளிப்படையான பேச்சு கோலிவுட் நடிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

No comments:

Post a Comment