Tuesday, February 4, 2014

`நம்பிக்கையின் கரம் ( hand of hope )’


மருத்துவ அதிசயம்.

ஜுலியா அர்மாஸ் , அட்லாண்டாவில் தாய்சேய் நலத் துறையில் தாதி யாக பணிபுரிந்த பெண் . அவள் கர்ப்பமாக இருந்த போது ஏற்பட்ட சில உபாதைகள் காரணமாக ஸ்கேன் செய்தபோது , கருவிலிருந்த குழந்தை `ஸ்பைனா பிஃபிடா ( spina bifida ) என்ற தண்டுவட நோயால்
பாதிக் பட்டிருப்பது கண்டறியப்பட்டது . இந்த நோயின் விளைவால் குழந்தையின்இடுப்புக்கு கீழே செயலற்று போகும் நிலை ஏற்படலாம். 

கருத்தரித்து 21 வாரங்களே ஆகியிருந்த நிலையில் ,குழந்தையை பிறக்க வைத்து அறுவை சிகிச்சை மேற்கொள்ளமுடியாது. குழந்தை உயிர் பிழைக்க தாயின் கருவறைக்குள் இருந்தேயாக வேண்டும். இந்நிலையில் , ஜார்ஜியாவில், புகழ்பெற்ற மருத்துவர் ஜோசப்
புருனர் என்பவரைப் பற்றிக் கேள்விப்பட்டு அவரிடம் சிகிச்சைக்கு சென்றாள் . சகல பரிசோதனைகளும் மேற்கொண்ட பின் , அவளுக்கு அறுவைசிகிச்சை செய்வதென தீர்மானிக்கப் பட்டது .

அவளது கர்ப்பப்பையின் சிறுபகுதி வெட்டியெடுக்கப் பட்டு , அதன் வழி குழந்தைக்கு அறுவைசிகிச்சை மேற் கொள்வதென முடிவு செய்யப்பட்டது. டாக்டர் புருனர் தலைமையில் ஒரு மருத்துவக் குழு அறுவைசிகிச்சை மேற்கொண்டது . குழந்தைக்கு வெற்றி கரமாக அறுவைசிகிச்சை முடிந்த நிலையில் தான் அந்த அதிசயம் நிகழ்ந்தது.

21 வாரங்களை , வயதாக கொண்ட அந்த சின்னஞ்சிறு சிசுவின் கரம் , அறுவை சிகிச்சைக்காக போடப்பட்டிருந்த துவாரத்தின் வழியாக
நீண்டு, தனக்கு சிகிச்சை செய்த மருத்துவரின் கைமேல் பட்டது . அந்த அதிசயக் காட்சி படமாக்கப்பட்டது . டாக்டர் புருனர் , அந்த
சம்பவத்தை விவரிக்கையில், `குழந்தையின் கை என்கையை தொட்டநொடி நான் உறைந்து போனேன் . நான் மெய்சிலிர்த்து போன தருணம் அது’ , என்கிறார் . இந்த படத்தைப் பார்க்கையில் நாமும் மெய்சிலிர்த்து தான் போகிறோம் .

தனக்கு உயிர் கொடுத்த கையை நம்பிக்கையோடு பற்றுவதாக அர்த்தப் படுத்தி , `நம்பிக்கையின் கரம் ( hand of hope )’ என்ற பெயரோடு, அந்த படம் உலகெங்கும் வலம் வந்தது .சம்பவம் நிகழ்ந்தது ஆகஸ்ட் 19, 1999 ம் ஆண்டு. அதே ஆண்டு டிசம்பர் 2 ம்
தேதி முழு ஆரோக்கியத் துடன்ஆண்குழந்தை பிறந்தது.

`இட்ஸ் எ மெடிக்கல் மிரக்கில் ’ என்ற வசனத்தை அடிக்கடி தமிழ்படங்களில் கேட்டிருப்போம். நிஜமாகவே இது தான் மெடிக்கல்
மிரக்கில்!! SWYC

Via - puthiya ulakam

No comments:

Post a Comment