Saturday, February 15, 2014

கெஜ்ரிவாலுக்கு மூளைக்கோளாறு: ஷிண்டே தாக்கு

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மூளைக்கோளாறு பிடித்துவிட்டது என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே கூறியுள்ளார்.
ஜன்லோக்பால் மசோதா தாக்கல் செய்ய முடியாமல் போனது என்பதை காரணமாக சொல்லி, டெல்லியில் அதிர்ஷ்டவசமாக ஆட்சிக்கு வந்த அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று இரவில் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
49 நாளில் ஆட்சி இழந்த கெஜ்ரிவால் குறித்து அரசியல் தலைவர்கள் பலரும் பல விதமாக தஙகளின் விமர்சனங்களை தெரிவித்துள்ளனர்.
காந்தியாவாதி அன்னா ஹசாரே: கெஜ்ரிவால் ராஜினாமா துரதிஷ்டமானது. இவர் காங்கிரஸ் உடன் சேர்ந்து நாடகமாடுகிறார்.
லாலு பிரசாத் யாதவ்: தனது பொறுப்பில் இருந்து தப்பிக்கவே கெஜ்ரிவால் ராஜினாமா செய்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர்: கெஜ்ரிவால் அரசியல் சட்டத்திற்கு எதிராக செயல்பட முனைந்தார். இவருக்கு மூளைக்கோளாறு எதுவும் இருக்கிறதா அல்லது அவர் அறிவுத்திறன் மிக்கவரா என்பதை ஊடகங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.
கிரண்பேடி: லோக்பால், லோக் அயுக்தா மசேதா பார்லியில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது பலம் வாய்ந்ததாக உள்ளது. ஜன் லோக்பால் என்ற தேவையற்ற பிரச்னை கிளப்பி விடப்பட்டுள்ளது.
அருண்ஜெட்லி: நோக்கம், மற்றும் திட்டம் எதுவுமில்லாமல் ஆட்சி செய்தது. ஆம் ஆத்மி டெல்லியில் திறமையாக அரசியல் செய்தனர், ஆட்சி செய்யவில்லை.
டெல்லியில் நடைபெற்ற கனவு ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது, ஒரு மோசமான அரசு ராஜினாமா செய்துள்ளது, டெல்லியில் கடந்த 49 நாட்களாக வழக்கத்திற்கு மாறான ஆட்சி நடைபெற்று வந்தது. அவர்கள் ஆட்சி நடத்துவதை விட சிறப்பாக போராட்டம் நடத்துகின்றனர்.
டெல்லி பாஜக தலைவர் ஹர்ஷவர்தன்; ஆளுனரின் முடிவை ஏற்க நாங்கள் தயாராக உள்ளோம். லோக்சபா தேர்தலுடன் டெல்லி சட்டசபைக்கு தேர்தல் வைத்தால் மோடிக்கு கிடைக்கும் ஓட்டுக்களை கெஜ்ரிவால் பிரிக்க வாய்ப்பு உள்ளது. பொய்கள் பேசுவதில் கெஜ்ரிவால் வல்லுநர், ஆம் ஆத்மி மக்களை பற்றி கவலை படவில்லை, அவர்கள் கவனமுடன் ஆட்சி செலுத்தவில்லை, பல வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து ஆம் ஆத்மிக்கு நிதி வருவதே விடை தெரியாத கேள்வியாக இருந்து வருகிறது.
ஆம் ஆத்மியில் இருந்து விலகிய வினோத்குமார் பின்னி தனது கருத்தில்; கெஜ்ரிவால் ராஜினாமா என்பது முன்கூட்டியே திட்டமிடப்பட்டது. வரும் லோக்சபா தேர்தலை கணக்கில் கொண்டு இவ்வாறு நாடகமாடுகிறார்.
மீண்டும் போராட்டக்களம்: இன்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த நிர்வாகிகள் நிரூபர்களிடம் பேசுகையில்; கெஜ்ரிவாலின் முடிவிற்கு ஆம் ஆத்மி ஆதரவு அளிக்கிறோம்.
ஊழலுக்கு எதிரான தேசிய அளவிலான போராட்டம் விரைவில் துவங்கப்படும், இந்த போராட்டத்திற்கு கெஜ்ரிவால் தலைமை வகிப்பா, பிப்ரவரி 23ம் திகதி இந்த போராட்டம் அரியானாவில் துவங்கும் என்றும் 2ம் கட்ட போராட்டம் உத்திர பிரதேசத்தில் மார்ச் 3ம் திகதி துவங்கும் எனவும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment