Tuesday, February 4, 2014

உங்க அபிமான கதாநாயகர்கள் எங்கு பிறந்தாங்கன்னு தெரிஞ்சுக்கணுமா....

இந்திய சினிமா சமீபத்தில்தான் தனது நூற்றாண்டை கொண்டாடி மகிழ்ந்தது. அந்த சினிமாவை தாங்கிப் பிடித்துக்கொண்டிருக்கும் இயக்குனர்களை போலவே கதாநாயகர்களுக்கும் இதில் முக்கிய பங்கு உண்டு.

அதிலும் சில கதாநாயகர்கள் எங்கோ பிறந்திருந்தாலும் இந்தியா முழுக்க இன்று புகழ்பெற்று திகழ்ந்து வருகின்றனர். அப்படிப்பட்ட டாப் கதாநாயகர்கள் எங்கு பிறந்தார்கள் என்று தெரிந்துகொள்வதில் எல்லோருக்கும் பொதுவாக ஒரு ஆர்வம் இருக்கும்.
ரஜினிகாந்த்
1950-ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் திகதி குடும்பத்தின் கடைசி பிள்ளையாக பெங்களூர் நகரில் பிறந்தார் நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவருக்கு அவருடைய பெற்றோர்கள் இட்ட பெயர் சிவாஜி ராவ் கேக்வாட் என்பதாகும்.
கமல்ஹாசன்
உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் நவம்பர் 7ஆம் திகதி, இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பிறந்தார்.

அஜித்குமார்
நடிப்பு, கார்ரேசிங், பைக்ரேசிங் எல்லாத்தையும் ஒருகை பாத்த நம்ம தல அஜித்குமார் எங்கபொறந்தாரு தெரியுமா?...
1971-ஆம் ஆண்டு மே 1-ஆம் திகதி ஹைதராபாத்தின் இரெட்டை நகரமாக கருதப்படும் செகந்தராபாத் தான்.
விஜய்
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் இயக்குனர் S.A. சந்திரசேகர் மற்றும் பாடகர் ஷோபா அவர்களுக்கும் மகனாக ஜூன் 22, 1974ம் ஆண்டு பிறந்தார் நம்ம இளையதளபதி விஜய் அவர்கள்.
சூர்யா
கோயம்புத்தூரில் ஜூலை 23, 1975ஆம் ஆண்டு பிறந்த சூர்யா அவர்களுக்கு அவர் தந்தை சிவக்குமார் இட்ட பெயர் சரவணன்.
மாதவன்
அலைபாயுதே மூலம் சினிமா உலகில் காலடி எடுத்து வைத்து, 3 இடியட்ஸ் எனற ஹிந்தி படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றதோடு நல்ல நடிகன் என்ற பெயரையும் வாங்கிய நம்மமேடி மாதவன் பிறந்தது ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஜம்ஷெட்பூர் நகரத்தில்.
தனுஷ்
கொலைவெறிபாட்டு மூலமா உலகம் பூராஃபேமஸ் ஆன நம்ம தனுஷ் இப்பஹிந்தி சினிமால ஒரு கலக்குகலக்கிட்டு இருக்காரு. தனுஷ் சினிமால சென்னை பாஷை சரளமா பேசறதுக்கு அவரு சென்னையில பொறந்தாருங்கறதும் ஒரு காரணம்.

No comments:

Post a Comment