Friday, February 14, 2014

காதலர் தினம் என்ற காமதேவன் ரதிதேவி ஆராதனை தினம்!பணவிரயம்,ஒழுக்ககேடு!


நீங்கள் காதலில் ஜெயிக்க வேண்டுமா? அப்போ இந்த கடவுளை வழிபடுங்கள்
[ வெள்ளிக்கிழமை, 14 பெப்ரவரி 2014, 06:43.10 AM GMT +05:30 ]
காதலில் வெற்றிபெற எந்த கடவுளை வணங்கலாம் என்று ஜோதிடர் கரு.கருப்பையா கூறியுள்ளார்.
உலகம் முழுவதும் இன்று காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி காதலிப்போரும், காதலை வெளிப்படுத்த நினைப்போரும் பல்வேறு யூகங்களை வகுத்து வருகிறார்கள்.
காதலர் தின கொண்டாட்டத்துக்காக சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. காதல் சிலருக்கு யோகத்தையும், சிலருக்கு கசப்பையும் பரிசாக வழங்குகிறது.
காதலில் வெற்றி பெற எந்த தெய்வத்தை வழிபடலாம் என்பது குறித்து ஜோதிடர் கரு. கருப்பையா கூறுகையில், ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் நன்றாக இருந்தால் அந்த ஜாதகம் காதலில் வெற்றி பெறமுடியும்.
பொதுவாக எந்த லக்கினம், ராசியாக இருந்தாலும் களத்திர ஸ்தானம் என்றும், 7, 8 ஆகிய வீடுகளை கொண்டே திருமணம் அமையும்.
பொதுவாக ஜாகத்தில் லக்னத்தில் சந்திரன் இருந்தாலோ, ஏழாமிடத்தில் சுக்கிரன் இருந்தாலோ காதல் வாய்ப்புகள் கைகூடலாம். ஜாதகத்தில் 3, 7, 11 ம் இடங்களில் ராகு, சூரியன் இருந்தால் காதல் யோகம் அமையுமாம். மேலும் 4, 8, 12–ல் ராகு அல்லது சூரியன் இருந்தாலும் காதலில் பச்சைக்கொடி காட்டலாம். ஆனால் 7ல் ராகு இருந்தால் கண்டிப்பாக சூழலில் பிரிவு ஏற்படும்.
இவைகள் எல்லாம் ஒரு புறம் இருக்க காதலில் வெற்றி பெற எந்த கடவுளை வணங்கலாம் என்று கேட்டால் காதலித்து திருமணம் செய்து கொண்ட முருகப்பெருமானையே வணங்க வேண்டும்.
காதலில் வெற்றிபெற முருகப் பெருமானை சப்தமி திதி தோறும் 7 விளக்குகளில் தீபமேற்றி வணங்கி வரலாம். செவ்வாய்க்கிழமை சப்தமியும் சேர்ந்து வரும் நாளில் முருகனை வழிபட்டால் கண்டிப்பாக காதலில் வெற்றி உண்டு.
முருகனின் காதலுக்கு துணை நின்றவர் விநாயக பெருமான் என்பதால் விநாயகரை வணங்கிவிட்டு முருகனை வழிபடுவது சிறப்பாகும் என்று கூறியுள்ளார்.
நூறு வீதம் சுத்தமான உண்மை!
காதலர் தினமான இன்று சீன காதலர்களுக்கு அதிர்ச்சிகரமான ஒரு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஷங்ஹாய் நகரத்தின் பிரதான திரையரங்கில் பீஜிங் லவ் ஸ்டோரி என்ற திரைப்படத்தை காதலர் தினத்தன்று ஒன்றாக பார்த்து ரசிக்கும் வாய்ப்பு சீனக் காதலர்களுக்கு கிடைக்கவில்லை.

ஏனெனில் இந்த திரையரங்கின் ஒற்றை இலக்க ஆசனங்கள் அனைத்தையும் ஒருவர் காசு கொடுத்து முன்பதிவு செய்துள்ளார். காதலர்கள் அடுத்தடுத்து அமர்வதை தடுப்பது அவரது நோக்கம்.

கடந்தாண்டு காதலி தம்மைப் புறக்கணித்து விட்டதால் இவர் மன கசப்புக்கு உள்ளாகி இருப்பதாக தெரிகிறது.

காதலுக்கு ஊனம் ஒரு தடையல்ல
[ வியாழக்கிழமை, 13 பெப்ரவரி 2014, 06:00.05 AM GMT +05:30 ]
கல்லூரி மாணவி ஒருவர் 3 ஆண்டுகளாக மாற்றுத்திறனாளி வாலிபரை காதலித்து வெற்றிகரமாக கரம்பிடித்துள்ளார்.
ஈரோடு கிருஷ்ணம் பாளையம் சிந்தன்நகர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தகுமார் ( 26). மாற்றுத்திறனாளியான இவர் டிப்ளமோ கணனி அறிவியல் முடித்து விட்டு ஆட்டோ கன்சல்டன்ட் அலுவலகத்தில் கணக்காளராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு கிறிஸ்தவ தேவாலயம் மூலம் திருநெல்வேலிக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
அப்போது திருநெல்வேலி மாவட்டம் பணக்குடியை சேர்ந்த முனியாண்டி மகள் கனியம்மாள் (22) என்பவரை சந்தித்தார். முதல் சந்திப்பே அவர்களுக்குள் இனம்புரியாத ஈர்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து ஈரோடு மாவட்டம் பல்லகவுண்டன்பாளையம் தனியார் கல்லூரியில் பாலிடெக்னிக் படித்து வந்த மாணவி கனியம்மாள் நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஈரோடு வந்து ஆனந்தகுமாரை பார்த்து பேசிவிட்டு செல்வார்.
இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் உயிருக்கு உயிராய் காதலித்து வந்தனர். இது பெண்ணின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதையடுத்து பெற்றோர் மகளை கண்டித்தனர்.
ஊனமுற்ற வாலிபரை திருமணம் செய்தால் உன்வாழ்க்கை வீணாகிவிடும் என அச்சம் தெரிவித்தனர். மேலும் மகளுக்கு பல்வேறு தடைகள் போட்டனர்.
இதனால் மனம் விரும்பியவரை மணமுடிக்க முடியாமல் போய்விடுமோ என வேதனையடைந்த கனியம்மாள் கடந்த மாதம் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார்.
இதையடுத்து அவரது தந்தை மகளின் விருப்பத்திற்கே வாழ்க்கை அமையட்டும் என விட்டுவிட்டார். ஆனால் தாயார் மகளின் காதலுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.
இந்நிலையில் கனியம்மாள் வீட்டைவிட்டு வெளியேறி ஈரோடு வந்தார். பின்னர் இருவரும் ஈரோட்டில் உள்ள ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். பின்னர் ஆனந்தகுமாரின் தாயாரின் வேண்டுகோளுக்கு இணங்க வினாயகர்கோவிலில் தாலிகட்டினர்.
இதனைத் தொடர்ந்து அவர்கள் ஈரோடு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.
மாற்றுத்திறனாளி வாலிபரை கரம்பிடித்தது தொடர்பாக கனியம்மாள் கூறுகையில், ஊனம் ஒரு தடையல்ல. அவர் ரெம்ப நல்லவர். ஒழுக்கமானவர், என்னை காலம் முழுவதும் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது.
மேலும் மனசுக்கு பிடித்தவருடன் வாழ்வதை பெருமையாக நினைக்கிறேன் என்று கூறியுள்ளார். ஆனந்தகுமார் கூறுகையில், மனைவியை வேலைக்கு அனுப்பாமல் நானே வேலை செய்து காப்பாற்றுவேன் என்று கூறியுள்ளார்.
http://www.newindianews.com/view.php?22KMC202lOU4e2DmKcb240Mdd304obc2mDNe44Ol10236AS3

இந்தியச் செய்தி
விடியலை நோக்கி வாழும் காதல்
[ புதன்கிழமை, 12 பெப்ரவரி 2014, 04:38.30 PM GMT +05:30 ]
ஊனமுற்ற நபர்களுக்காக எத்தனையோ மனிதர்கள், அமைப்புகள் குரல் கொடுத்தாலும் அவர்களுக்கான விடியல் இன்னும் திறக்கப்படவில்லை என்பது தான் உண்மை.
சாதனை படைக்க ஊனம் ஒரு தடையல்ல என்ற உண்மையை தங்களது சாதனைகள் மூலம் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளனர்.
ஆனால் இன்னும் சில மாற்றுத்திறனாளிகளின் மேல் இருள் என்னும் தடைக்கற்கள் விலகி, வெளிச்சம் என்னும் சாதனை பிறக்கவில்லை என்ற உண்மையை யாராலும் மறுக்க இயலாது.
இந்த சமூகத்தில் மாற்றுத்திறனாளிகள் சந்திக்கும் பிரச்சனைகள் சொல்லில் அடங்கா, அப்படியான சூழ்நிலையை கடந்த வந்த பெண் தான் மும்பையை சேர்ந்த லதா.
இரண்டு வயதாக இருக்கும் போதே, முழுவதுமாக பார்வையை இழந்து விட்ட இவர், தன்னுடைய மனதைரியத்தால் கல்லூரி படிப்பை முடித்து, மற்றவர்களுக்கு கற்பிக்கும் விதத்தில் மிகச்சிறந்த ஆசிரியராக உருவெடுத்தார்.
ஆனால் இவரை சமூகம் தான் ஏற்றுக்கொள்ளவில்லை, ஆசிரியர் பணிக்காக விண்ணப்பித்திருந்த போது இவளால் எப்படி முடியும்? மாணவர்களுக்கு எப்படி சொல்லிக் கொடுப்பாள்? என்பது போன்ற தடைக்கற்கள் அவள் மேல் வந்து விழுந்தன.
தன்னுடைய திறமைகள் எல்லாம் வீணாகப்போகிறதே என்ற மனக்குமுறல் இருந்தாலும், அனைத்தையும் சகித்துக் கொண்டாள்.
ஏன் சாலையை கடக்க நிற்கும் போது கூட, யாரும் உதவி செய்ய மாட்டார்களாம், உதவி என்று கேட்டாலும் இவளை பார்க்காமல் சென்றவர்கள் தான் ஏராளம்.
ஆனால் எப்படியோ இந்த சமூகத்தில் உயர்வான நிலையை அடைய வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே மேலோங்கி நின்றது.
எத்தனையோ முயற்சிகள் வீணாகிப்போனாலும், தற்போது பள்ளி ஒன்றில் வரவேற்பாளராக வேலை பார்த்து வருகிறார்.
காலங்கள் கடந்து செல்ல, காதல் மனதிற்குள் பூத்தது…. எவ்வாறு முடியும்? ஏளனமாய் பார்க்கும் இந்த சமூகத்தினரின் மத்தியில்… காதல், திருமணம் என்றாலே எதிர்ப்புகள் தான் அதிகம் எழும்…. அதனையும் மீறி மாற்றுத்திறனாளியான சைலேஷ் குல்கர்னி இவரை ஏற்றுக் கொண்டார்.
இருவரும் மிக மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகின்றனர். அன்பு, பாசத்தால் பிணைக்கப்பட்டு காதலை வாழ வைத்துக் கொண்டிருக்கும் இந்த தம்பதிகள் பல்லாண்டு வாழ வேண்டும்.
http://www.newindianews.com/view.php?22KMC202lOK4e2DmKcb240Mdd304obc2mDNe44Ol10236A43

No comments:

Post a Comment