Sunday, August 25, 2013

நம்ம பன்னீர் விடுவாராம் கண்ணீர் ?


இன்றைய தேதியில் அ.தி.மு.க. வட்டாரங்களில் மிக பரபரப்பாக அடிபடும் விஷயம், தமிழக நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தொடர்பாக அடிபடும் ஒரு சமாச்சாரம்தான். முதல்வர் சீக்கிரத்தில் அமைச்சரவையில் மீண்டும் மாற்றம் கொண்டுவரப் போகிறார் என்றும், அதில் பன்னீர்செல்வத்தின் தலை உருளலாம் எனவும் அ.தி.மு.க. தலைகள் கிசுகிசுத்துக் கொள்கிறார்கள்.அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மீது தமிழக முதல்வர் ஜெயலலிதா கடும் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. அதற்கு இரண்டு வெவ்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.

முதலாவது காரணம், மதுரையை சுற்றியுள்ள பகுதிகளில் வர்த்தகத்தில் கொடிகட்டிப் பறந்த ஒரு பெரிய புள்ளியுடன் செய்துகொண்ட டீல் என்கிறார்கள். கடந்த காலத்திலும் அந்த புள்ளியின் தடுப்புச் சுவராக அமைச்சர் இருந்த போதிலும், அது, ‘மேலே’ தெரிந்தே நடந்த டீலாம். ஆனால், தற்போது அமைச்சர் சுய முயற்சியில் ‘சைட்-கிக்’ டீல் ஒன்றைப் போட்டு காரியம் செய்ததில் ‘ஏதோ’ சூட்கேஸ் சிக்கல் என்கிறார்கள்.இரண்டாவது, முதல்வரின் சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக அமைச்சர் அடித்த ஒரு காமென்ட்டும், “முதல்வர் நாற்காலி என்னை விடாது போலிருக்கிறதே” என்று கூறியதும், கார்டன் வரை சென்றுவிட்டதில் ஏற்பட்ட சிக்கல் இது என்கிறார்கள்.

இந்த இரண்டு விவகாரங்களும் அல்லது, இவற்றில் ஒன்று முதல்வரை பொங்கி எழ வைத்தது என்று கூறும் கார்டனுக்கு நெருக்கமான சோர்ஸ் ஒன்று, கடந்த வாரத்தில் இரண்டு தடவைகள் முதல்வரை சந்திக்க அமைச்சர் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. முதல்வர் தரிசனத்துக்காக சில மணிநேரம் காத்திருந்துவிட்டு அமைச்சர் திரும்ப வேண்டியதாயிற்று” என்கிறார்.மூத்த அமைச்சர்கள் மற்றும் 21 மாவட்ட செயலர்களை முதல்வர் ஜெயலலிதா எந்த நேரத்திலும் மாற்றுவார் என்று கூறப்பட்டு வரும் நிலையில், 21-ல் ஒன்றாக பன்னீரும் இருப்பாரோ என்று திக்திக் மனநிலையில் உள்ளார்கள், அவரது ஆதரவாளர்கள்.

என்னங்க… இதற்கெல்லம் கலங்கலாமா? ஆனை படுத்தாலும், ஆமையைவிட உயரமுங்க… பதவி போனாலும் அண்ணன் மீண்டும் டீக்கடை வரை போக மாட்டாருங்க!

No comments:

Post a Comment