Friday, August 30, 2013

செக்ஸ் வீடியோ! காதலியை சுட்டுக் கொல்ல உத்தரவிட்ட தலைவர்

[ வெள்ளிக்கிழமை, 30 ஓகஸ்ட் 2013, 06:55.45 மு.ப GMT ]
செக்ஸ் வீடியோவில் தனது முன்னாள் காதலி தோன்றியதால் கடும் கோபமடைந்த வட கொரிய தலைவர் அவரை கொடூரமாக கொல்ல உத்தரவிட்டுள்ளார்.
தென் கொரியாவிலிருந்து வெளியாகும் சோசன் இல்போ என்ற நாளிதழ்தான் இந்த பரபரப்புச் செய்தியை வெளியிட்டுள்ளது.
வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்னின் காதலியின் பெயர் ஹியான் சோங் வோல், பிரபலமான பாடகியும் ஆவார்.
இருவரும் நெருங்கி பழகியதுடன் இராணுவக் கூட்டங்கள், பத்திரிக்கையாளர் சந்திப்பு மற்றும் பொது நிகழ்ச்சிகள் என அனைத்திலுமே இருவரும் ஒன்றாக இருந்தனர்.
இந்நிலையில் கடந்த 17ம் திகதி ஹியான் உட்பட 12 பேரை கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.
இதற்கு காரணம் இவர்கள் அனைவரும் செக்ஸ் வீடியோ ஒன்றில் நடித்ததே.
மேலும் இந்த வீடியோவை சீனாவை சேர்ந்த பிரபலமான நடனக்குழுவுக்கு விற்றுள்ளனர்.
இது தெரியவந்ததையடுத்து 12 பேரையும் கைது செய்ய சொன்ன கிம், அவர்களது குடும்பத்தினர் முன்னிலையில் வைத்து சுட்டுக் கொல்ல உத்தரவிட்டுள்ளார்.
இதனையடுத்து 20ம் திகதி 12 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆகஸ்ட் 20ம் தேதி 12 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

No comments:

Post a Comment