Saturday, August 24, 2013

புலிகளை எப்படி சித்தரிக்கிறார்கள் ?



கதை தெரிந்துவிட்டது,தமிழ்நாட்டைத்தவிர உலகில் அனைத்து மக்களும் படம் பார்ப்பார்!அப்போ தமிழர் ஏன் பார்க்கக்கூடாது என்று தமிழர் ஆதரவானவர்கள் போராடுகிறார்கள்!!தமிழர் புலிகளை தவறானவர்கள் என்று நம்புவார்கள் என்பதாலா?புலி ஆதரவுப்படங்க்களை இலங்கை தடுத்துள்ளது,மற்ற நாடுகளில் புலிகள் பயங்கரவாதிகள் என்றாகமட்டுமல்ல இபோதும் தடையில்லையே!அப்போ சுதந்திரத்துக்கு எதிராளிகள் யார் என்று சந்தேகம் தோன்றுகின்றதே!!உண்மையில் கருத்துச்சுதந்திரத்துக்கு எதிராக போர்க்கொடி பிடிப்பது தமிழரா? 
இன்று உலகளாவிய ரீதியில் வெளியாகவுள்ள மற்றாஸ் கஃபே படத்தில் விடுதலைப் புலிகளை எவ்வாறு சித்தரித்துள்ளார்கள் என்று தெரியவேண்டுமே ? ஆனால் இதற்கு முன்னர் தாயாரிப்பாளர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம். படத்தில் காண்பிக்கப்படும் தீவிரவாத இயக்கம் கற்பனையானது என்று பட யூனிட்டில் சொல்கிறார்கள். தமிழீழ விடுதலை புலிகள் (LTTE) என்ற பெயர் உபயோகிக்கப்படவில்லை எனவும், LTF என்ற பெயருடைய கற்பனை இயக்கமே கதையில் உள்ளது என்றும் அவர்கள் சொல்கிறார்கள். 

கற்பனை இயக்கத்தின் தலைவராக நடிப்பவர், அஜய் ரத்னம். இந்தப் படத்தில் இயக்க தலைவரின் பெயர் ‘அண்ணா’ பாஸ்கரன். இந்த கேரக்டர், ‘தம்பி’ பிரபாகரனை குறிக்கிறது என்கிறார்கள் எதிர்ப்பாளர்கள். (விடுதலைப் புலிகளின் வர்ணத்தில் யூனிஃபாரம் உள்ளது) .மெட்ராஸ் கபே படத்தில் LTF என்ற தீவிரவாத இயக்கத்தினரை எப்படி காட்டுகிறார்கள் என்று பார்க்க ஆவலா ? இதோ...சில அரிய புகைப்படங்கள்.











No comments:

Post a Comment