Friday, August 9, 2013

விஜய் மோபைலை ஒட்டுக் கேட்க்கும் ஜெயா!



நடிகர் விஜய் நடித்து இன்று (09) வெளியாகவுள்ள படம் "தலைவா" ஆகும். முதலில் இலங்கை பின்னர் தமிழ் நாடு என்று சகல இடங்களிலும் இத்திரைப்படத்துக்கு பலத்த எதிர்பு கிளமியுள்ளது. அதாவது தலைவா படம், விஜயின் அரசியல் வாழ்கைக்கு வித்திடுவதாக அமைந்துள்ளது எனப் பலர் கருத்து தெரிவித்துள்ளார்கள். இப் படத்தில் வியஜ் மறைமுகமாக இலங்கை அரசை சாடுவதுபோலவும், ஈழத் தமிழர்களை ஆதரிப்பதுபோலவும் உள்ளதாம். இவை எல்லாம் ஒரு புறம் இருக்க, இத்திரைப்படத்தை வெளியிட முன்னரே பல தடங்கல்கள் வந்துகொண்டு இருக்கிறதே ஏன் ? இதை யாராவது சற்று யோசித்தீர்களா ? நேற்றைய தினம் நடைபெற்ற சம்பவம் என்ன இதோ தருகிறோம் அறிந்துகொள்ளுங்கள். 

விஜய் இன் இத்திரைப்படம் குறித்ததேதியில் வெளியானால், இல்லை என்றால் 100 நாள் ஓடினால் வருங்காலத்தில் விஜய் தமிழ் நாட்டின் முதல்வர் ஆக வாய்ப்பு உள்ளதாக பல அரசியல்வாதிகள் கருதுகிறார்கள். அவர்கள் விஜயகாந்தைப் பார்த்து பயப்பிடுவதை விட விஜயைப் பார்த்து பயப்பிடுவதே அதிகமாக உள்ளது. காரணம் அவருக்கு இருக்கும் மித மிஞ்சிய ரசிகர் ஆதரவு தான். இதில் அதிமுக, திமுக,மதிமுக, காங்கிரஸ் என்று இவர்கள் பிரிவு பார்க்க மாட்டார்கள். ஒரு நடிகன் அரசியலுக்கு வந்தால், அதனால் எவ்வளவு பாதிப்பு ஏற்படும் என்பதை இவர்கள் எம்.ஜீ.ஆர் மூலம் கண்டிருக்கிறார்கள். எனவே ஒரு நடிகனை அவ்வளவு சீக்கிரம் இவர்கள் அரசியலில் இறங்க விடப்போவது இல்லை. இதன் காரணமாகவே விஜய்யின் இப் படத்துக்கு பெரும் சிக்கல் ஏற்பாட்டுள்ளது. தனது தந்தை மற்றும் தாத்தாவின் கதைதான் தலைவா என்று சொல்லி ஒரு நபர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதுபோக ஏகப்பட்ட அரசியல் பிரஷர். இதனை தவிர்க்கவும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நிலைமையை விளக்கவும் விஜய் அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர், மற்றும் இப் படத்தின் டரைக்டர் விஜய் ஆகிறோர் கொட நாடு சென்றுள்ளார்கள். ஆனால் முதல்வர் ஜே யைப் பார்க்க முடியவில்லை. அம்மா கதவை மூடிவிட்டார். அந்த ரேஞ்சுக்கு அரசியல் போகிறது. இதேவேளை இந்தப் படம் அரசியல் படம் என்றும், அதனை திரையிட்டால் திரையரங்குகளில் குண்டு வைப்போம் என்றும் மிரட்டல் விடுக்கப்பட்டதனை அடுத்து படம் திரையிடுவதில் சிக்கல் எழுந்தது. அதுமட்டும் அல்லாமல், பொலீஸார் தங்கள் தரப்பில் அத்தனை திரையரங்குகளுக்கும் பாதுகாப்பு அளிக்க இயலாது என்று கூறியிருந்தனர். இதையடுத்து விஜய், 'தலைவா' படம் அரசியல் படமல்ல. குழந்தைகளோடு குடும்பமாக ரசிக்க வேண்டிய ஜனரஞ்சகமான படம் என அறிக்கை விட்டிருந்தார்.

இந்தநிலையில், கொடநாட்டில் தங்கியுள்ள முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க நடிகர் விஜய், அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், படத்தின் இயக்குனர் விஜய் ஆகியோர் முயற்சி செய்தனர். ஆனால் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் ஏமாற்றத்துடன் திரும்பினர். கொடநாடு செல்வதற்கு முன்பே "கெரடாமட்டம்" என்ற இடத்தில் உள்ள சோதனைச் சாவடி பகுதியிலேயே இவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டதாக தகவல் கசிந்துள்ளது. 'தலைவா' படத்திற்கு பாதுகாப்பு கேட்பது தொடர்பாக முதல்வரைச் சந்தித்து விளக்கம் அளிக்க நினைத்து கொடநாடு சென்றார்களாம். 

இந்த தகவலை மீடியாக்களுக்கு தெரிவிக்க விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் சில இந்திய ஊடகங்களை தொடர்பு கொள்ள முயன்றபோது அவருடைய கையடக்கத் தொலைபேசி நிறுத்தப்பட்டு இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. சொ ஒட்டுமொத்ததில் விஜய் இன் தந்தையின் கையடக்க தொலைபேசி ஒட்டுக்கேட்க்கப்பட்டு வந்துள்ளதோடு, குறிப்பிட்ட சமயம் பார்த்து அவரது நெட்வேர்க் நிறுத்தப்பட்டும் உள்ளது. 

இதில் வேதனைக்குரிய விடையம் ஒன்றும் உள்ளது. அது என்ன தெரியுமா ? தமிழ் நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் ஈழத் தமிழர் தொடர்பாகப் பேசுவார்கள். ஆனால் ஈழத் தமிழர்களுக்காக ஒன்றிணைய மாட்டார்கள். ஆனால் தமது அரசியல் வாழ்கைக்கு யாராவது வேட்டு வைக்க முனைந்தால், உடனே ஒன்றாக நின்று அவருக்கு ஆப்படிப்பதில் தமது கவனத்தை செலவிடுவார்கள். விஜய் போன்ற மனிதர்கள் அரசியலுக்கு வந்தால் இந்த நிலமை மாறுமா ? அதுவும் தெரியவில்லை 

No comments:

Post a Comment